For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி, சிலிண்டரைத் தூக்கிட்டு அலைய வேணாம்... நாசா புது திட்டம்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் பெரிய பெரிய சிலிண்டர்களில் ஆக்ஸிஜன் கொண்டு செல்ல வேண்டியிருக்காது என்கிறது நாசாவின் புதிய ஆய்வு.

இதற்காக செவ்வாய் கிரகத்திலேயே நுண்ணுயிர்களைக் கொண்டு ஆக்சிஜன் உருவாக்கும் திட்டம் ஒன்றை நாசா தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவைச் சேர்ந்த டெக்‌ஷாட் என்ற நிறுவனத்துடன் இணைந்து செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆராய்ச்சியை மேற்கொள்ள உள்ளதாக www.ign.com இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Nasa Looks to Make Oxygen on Mars Using Microbes

நாசாவின் இந்தத் திட்டத்தின் படி, எதிர்காலத்தில் செவ்வாய்கிரகத்திற்கு சிலிண்டர்களில் ஆக்சிஜன் எடுத்துச் செல்ல வேண்டி இருக்காது. அதற்குப் பதிலாக நுண்ணுயிர்களைக் கொண்டு செவ்வாய் கிரகத்திலேயே ஆக்சிஜன் உருவாக்கப்படும் என்று டெக்‌ஷாட் நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி யூஜின் போலந்த் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே, செவ்வாய் கிரகத்தில் உள்ள மணலில் நுண்ணுயிர்களைக் கொண்டு சோதனை செய்து, மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான சூழல் அமைப்பை உருவாக்குவதே ஆகும்.

2030-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Future human missions to the Red Planet may not have to carry heavy oxygen cylinders with them. Scientists are working on ways to produce the life gas on Mars itself. Nasa is looking at creating ecosystems able to support life, for future human missions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X