For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய பாக்டீரியாவுக்கு கலாம் பெயர் வைத்த நாசா

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாக்டீரியாவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் புதிய பாக்டீரியா ஒன்றை நாசா கண்டுபிடித்துள்ளது. அந்த பாக்டீரியாவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேற்று கிரகத்தில் உயிரினங்கள் இருப்பது பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ள நாசா விஞ்ஞானிகள் குழுவின் தலைவரான தமிழகத்தைச் சேர்ந்த கஸ்தூரி வெங்கடேசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

NASA names bacteria after Abdul Kalam

அபப்போது அவர் கூறுகையில்,

வேற்று கிரகத்தில் உயிரினங்கள் இருக்கின்றதா என்று எங்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் எங்கள் குழு கண்டுபிடித்துள்ள புதிய பாக்டீரியாவுக்கு அப்துல் கலாமின் பெயர் வைத்துள்ளோம். பாக்டீரியாவுக்கு சோலிபாசிலஸ் கலாமி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

காமா கதிர்வீச்சை தாங்கும் சக்தி கொண்ட இந்த பாக்டீரியா மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியது. அப்துல் கலாமின் அறிவியல் எண்ணங்களை பார்த்து வியந்த நான் அவர் மீதான மரியாதையின் காரணமாக பாக்டீரியாவுக்கு அவர் பெயரை வைக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நாசா பாக்டீரியாவுக்கு கலாம் பெயரை வைக்க அனுமதி அளித்தது என்றார்.

English summary
A new bacteria found by Nasa scientist team has been named after former president Abdul Kalam. The bacteria is useful to the mankind.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X