For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமேசான் காட்டுத்தீ.. மக்களுக்கு பேராபத்து.. மேப்புடன் நாசா வெளியிட்ட பகீர் தகவல்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கொழுந்து விட்டு எரியும் அமேசான் காடு... வெளிவரும் உண்மைகள்

    பிரேசிலியா: அமேசான் மழைக்காட்டில் தொடர்ந்து வரும் தீயால் ஆபத்தை விளைவிக்கக் கூடிய கார்பன் மோனாக்சைடு பொலிவியா மற்றும் பிரேசில் பகுதியில் உள்ள வளிமண்டலத்தில் பரவியுள்ளது.

    உலகளவில் மிகவும் பிரபலமான காடு என்றால் அது அமேசான் காடுகள்தான். இங்கு அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள், அரிய வகை விலங்குகள் ஆகியன உள்ளன.

    இந்த காடு பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. பிரேசிலில்தான் அதிகளவில் பரவி உள்ளது.

    வாவ்.. என்ன ஒரு வரவேற்பு.. ஹாங்காங்கில் கலக்கும் கருப்பு ஹீரோக்கள்.. சீனாவை கலங்கடிக்கும் வீடியோ! வாவ்.. என்ன ஒரு வரவேற்பு.. ஹாங்காங்கில் கலக்கும் கருப்பு ஹீரோக்கள்.. சீனாவை கலங்கடிக்கும் வீடியோ!

    தீயணைப்பு வீரர்கள்

    தீயணைப்பு வீரர்கள்

    இந்த கடந்த சில நாட்களாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. அடர்ந்த காடு என்பதால் உலகின் மிகப் பெரிய காடு என்பதாலும் இங்கு தீயை அணைப்பது என்பது பிரேசில் நாட்டிற்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் தீயை அணைக்க 80 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பிரேசில் மக்கள்

    பிரேசில் மக்கள்

    அமேசான் காட்டுத்தீயால் அங்குள்ள அரிய வகை உயிரினங்கள், மூலிகை செடி கொடிகள், மரங்கள், விலங்குகள் அழியும் நிலையில் உள்ளது. எனவே காடுகளை பாதுகாக்க வேண்டும் என பிரேசில் நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கார்பன் மோனாக்சைடு

    கார்பன் மோனாக்சைடு

    இந்த நிலையில் நாசா ஒரு அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளது. பொலியா மற்றும் பிரேசில் பகுதிகளில் உள்ள வளிமண்டலத்தில் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய கார்பன் மோனாக்சைடு கலந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதை வளிமண்டல் அகசிவப்பு ஒலிக் கருவி (Atmospheric Infrared Sounder (AIRS)) மூலம் நாசா கண்டுபிடித்துள்ளது.

    தகவல்கள்

    தகவல்கள்

    கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை 18ஆயிரம் அடி உயரத்தில் கார்பன் மோனாக்சைடு எந்த அளவுக்கு அடர்த்தியாக கலந்துள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளாக நாளாக கார்பன் மோனாக்சைடு கலந்துள்ள மேகங்கள் அமேசான் பகுதியின் வடமேற்கில் பரந்து விரிந்து செல்கிறது. மேலும் இங்கிருந்து தென்கிழக்கு பகுதியை நோக்கியும் அது பரவியுள்ளது.

    கார்பன் மோனாக்சைடு

    கார்பன் மோனாக்சைடு

    நாசா வெளியிட்டுள்ள வரைப்படத்தில் பச்சை நிறத்தில் காணப்படுவது கார்பன் மோனாக்சைடின் அடர்த்தியாகும். ஒரு மாதம் ஆனாலும் அந்த கார்பன் மோனாக்சைடு நீண்ட தூரங்களுக்கு சென்றுக் கொண்டே இருக்கும். கார்பன் மோனாக்சைடு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும்.

    பெரும் ஆபத்து

    பெரும் ஆபத்து

    காற்றை மாசுப்படுத்தி பசுமை இல்ல வாயு மற்றும் பருவநிலை மாற்றத்தையும் பாதிக்கும் என்பதால் நாசாவின் இந்த தகவல்கள் அச்சுறுத்தும் அளவில் உள்ளது. இந்த வாயுவை லேசாக சுவாசிப்பதால் தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்படும். இதே அதிக அளவு சுவாசித்தால் சுயநினைவு அற்ற நிலைக்கோ அல்லது இறக்கும் நிலைக்கோ செல்லும் வாய்ப்புள்ளது. மேலும் இது மாரடைப்பையும் ஏற்படுத்தும் என்பதால் காற்றுடன் கலந்துள்ள இதை சுவாசித்தால் பொலிவியா, பிரேசில் மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும்.

    English summary
    NASA has posted data from its Atmospheric Infrared Sounder (AIRS) instrument related to the carbon monoxide movement in the atmosphere associated with the wildfires from the Amazonian regions of Bolivia and Brazil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X