For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரண்டு மாதமாக தொடர்ந்து கொந்தளிக்கும் ஹவாய் எரிமலை.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்

அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவில் கடந்த இரண்டு மாதமாக எரிமலை தொடர்ந்து வெடித்து வருகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

ஹவாய்: அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவில் கடந்த இரண்டு மாதமாக எரிமலை தொடர்ந்து வெடித்து வருகிறது.

அமெரிக்க மாநிலங்களில் ஒன்றுதான் ஹவாய் தீவு. மக்கள் அதிகளவில் சுற்றுலா செல்லும் நாடுகளில் இந்த தீவும் முக்கியமான இடத்தில் உள்ளது.

இந்த தீவு பார்க்க எந்த அளவுக்கு அழகாக இருக்குமோ அதே அளவிற்கு மோசமானதும் கூட. கடந்த இரண்டு மாதமாக தினமும் இங்கே எரிமலை வெடித்து வருகிறது.

என்ன எரிமலை

என்ன எரிமலை

மத்திய பசுபிக் கடல் அருகே இருக்கும் இந்த தீவில் எரிமலை வெடித்துக் கொண்டுள்ளது. ஹவாய் தீவில் மிகவும் தீவிரமான நிலையில் வெடிக்கக்கூடிய வகையில் பல எரிமலைகள் இருக்கிறது. கிலாயூ எரிமலைதான் அங்கு வெடித்துள்ளது. எரிமலையை தொடர்ந்து அங்கு வரிசையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

எத்தனை தடவை

எத்தனை தடவை

இந்த கிலாயூ எரிமலை நேற்று கூட வெடித்துள்ளது. இந்த ஒரு எரிமலை மட்டும் கடந்த இரண்டு மாதத்தில் 23 முறை வெடித்துள்ளது.இந்த தொடர் வெடிப்பு காரணமாக அங்கு ஊர் முழுக்க எரிமலை குழம்பு பரவி இருக்கிறது. எரிமலை மொத்தமாக வெடித்த காரணத்தால் மக்கள் அவர்கள் இருந்த பகுதியைவிட்டு வெளியேறினார்கள்.

நாசா அதிர்ச்சி

நாசா அதிர்ச்சி

அந்த ஊரின் முக்கால்வாசி பகுதியை இந்த எரிமலை நாசம் செய்துள்ளது. நாசாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமும் இந்த எரிமலையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி வானத்தில் இருந்து தெரியும் ஒரே எரிமலை இதுதான் என்றுள்ளது. இந்த புகைப்படம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

பாதிப்பு

பாதிப்பு

மக்கள் வசிப்பிடத்தை நோக்கி இந்த எரிமலை குழம்புகள் வந்துள்ளது. மக்கள் வெளியேறும் பகுதியையும் எரிமலை குழம்பு மூடி விட்டது.இந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வீடுகளை காலி செய்யும் போது அங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் எத்தனை பேர் காயமடைந்தார்கள், எத்தனை பேர் மரணமடைந்தார்கள் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.

English summary
NASA releases a photo of a volcano in Hawaii. A volcano in Hawaii erupts, 500 minor and major earthquakes followed. People have been evacuated from the state after these to major earthquakes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X