For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலிபோர்னியாவை சுற்றி வளைத்த 6 காட்டுத் தீ.. நாசா வெளியிட்ட பகீர் புகைப்படம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகள் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கலிபோர்னியாவில் பற்றி எரியும் தீ..வீடியோ

    கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகள் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாகாணத்தை மொத்தம் 6 காட்டுத் தீக்கள் சூழ்ந்து இருப்பதாக கூறப்படுகிறது .

    சாண்டா ரோசா, சாண்டா பார்பாரா பகுதிகளில் ஆரம்பித்த காட்டுத் தீ தற்போது லாஸ் ஏஞ்சல்சுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. இது இந்த மாதத்தில் ஏற்படும் ஏழாவது காட்டுத் தீ ஆகும்.

    மேலும் இந்த காட்டுத் தீ காரணம் நிறைய உயிர் சேதங்கள் ஏற்பட்டு இருக்கிறது. மக்கள் கொத்து கொத்தாக தங்கள் இருப்பிடங்களை காலி செய்து வெளியே சென்று கொண்டு இருக்கிறார்கள்.

    கலிபோர்னியாவில் காட்டுத் தீ

    கலிபோர்னியாவில் காட்டுத் தீ

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் காட்டுத் தீ ஏற்படுவதற்கு பெயர் போனது. வருடத்தில் அதிக நாட்கள் இந்த மாகாணம் காட்டுத் தீயால் பாதிக்கப்படும்.சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் காட்டுத் தீ சீசன் அங்கு தொடங்கியது. கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு அங்கு பெரிய காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது தாமஸ், ரே, லீலாக், ஸ்கிர்பால், லிபர்டி என்ற ஐந்து காட்டுத் தீயும் பெயர் சூட்டப்படாத புதிய காட்டுத்தீ ஒன்றும் அங்கு உருவாகி இருக்கிறது.

    தாமஸ்

    தாமஸ்

    இந்த காட்டுத் தீக்களில் தாமஸ் காட்டுத் தீ மிகவும் அதிக சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சாண்டா பார்பாரா பகுதியில் ஆரம்பித்த தீ தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் வரை பரவி உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு இதனால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒரே நாளில் 6 காட்டுத் தீ ஏற்படுவது கலிபோர்னியாவில் இதுவே முதல்முறையாகும்.

    நாசாவின் புகைப்படம்

    நாசாவின் புகைப்படம்

    தற்போது இந்த தீ குறித்து நாசா புகைப்படம் வெளியிட்டு இருக்கிறது. வெவ்வேறு வகையில் ஸ்கேன் செய்யப்பட்டு இந்த புகைப்படங்கள் செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. 'சுயோமி என்பிபி'' என்று சாட்டிலைட் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளது. இதில் கலிபோர்னியாவில் தீ பரவி இருப்பது கண்கூடாக அப்படியே தெரிகிறது. மேலும் கலிபோர்னியாவில் இரவில் எடுக்கப்பட்ட புகைப்படம் பீதியை கிளப்பும் வகையில் இருக்கிறது.

    மோசமான பாதிப்பு

    மோசமான பாதிப்பு

    மோசமான பாதிப்பு

    English summary
    One of the most destructive fires in California's history was raging in a sprawling national forest and creeping up the Pacific coast, forcing new evacuations. Due to this huge amount of fire, more than 2,50,000 people migrated from California, 75 people died. The Thomas Fire has burned 230,500 acres (93,300 hectares) since it erupted a week ago and has been only 15 percent contained, the Calfornia Fire Department (Cal Fire) said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X