For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஹா.. அட்டகாசமான சூரியன்.. அழகான சூரியன்.. பாருங்க மக்களே பாருங்க!

Google Oneindia Tamil News

நியூயார்க்: சூரியனின் தெளிவான புகைப்படங்கள் கொண்ட அல்ட்ரா ஹெச்.டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது நாசா.

விண்வெளி மற்றும் அதிலுள்ள கோள்கள் குறித்து சர்வதேச அளவில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நாசா அனுப்பிய சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி விண்கலம் சூரியனின் படங்களை எடுத்து அனுப்பி வருகிறது.

மிகப் பெரிய நட்சத்திரமான சூரியன் பூமியிலிருந்து 150 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சூரியனின் வெப்பத்தை இங்கிருந்தபடியே நம்மால் உணர முடியும்போது அருகில் சென்று பார்ப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

பார்ப்போம்... ரசிப்போம்

பார்ப்போம்... ரசிப்போம்

எனவே சூரியனின் நெருங்கிய புகைப்படங்களை விண்கலங்கள் எடுத்து அனுப்பும் புகைப்படங்கள் மூலமாகவே நாம் பார்த்து ரசித்து வருகிறோம்.

ஹெச்.டி வீடியோ...

ஹெச்.டி வீடியோ...

இந்நிலையில், சூரியன் தெளிவான புகைப்படங்களைக் கொண்டு வீடியோ ஒன்றைத் தயாரித்துள்ளது நாசா. அல்ட்ரா ஹெச்.டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் சூரியன் ஊதா, மஞ்சள், சிவப்பு என மாறி மாறி கண்களுக்கு விருந்தளிக்கிறது.

ஆச்சர்யம் தரும் போட்டோக்கள்...

ஆச்சர்யம் தரும் போட்டோக்கள்...

சாதாரண கண்களால் நேரடியாக சூரியனை சில நிமிடங்கள் கூட பார்க்க முடியாத சூழ்நிலையில், சூரியனின் இந்த குளோசப் படங்கள் ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது. இதன் மூலம் சூரியன் குறித்த பல புதிய பரிமாணத் தகவல்களை மக்கள் அறிய முடிகிறது.

300 மணி நேர உழைப்பு...

இந்த வீடியோவில் ஒரு நிமிடக் காட்சிகளை உருவாக்கவே விஞ்ஞானிகளுக்கு சுமார் 10 மணி நேரம் தேவைப்பட்டதாம். இந்தக் கணக்குப்படி சுமார் 300 மணி நேர உழைப்பில் இந்த 30 நிமிட வீடியோவை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

English summary
Treating all the space lovers NASA has recently released a new 30-minute video showcasing stunning shots of the sun taken in ultra HD quality.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X