For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ப்ளூட்டோவுடன் டச் விட்டுப் போன நாசா.. மீண்டும் கிடைத்த தொடர்பு.. புதிய கரும்படலம் கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நாசாவின் விண்கலம் ஜூலை 4ம் தேதி தனது ப்ளூட்டோ கிரகத்துடனான தொடர்பை இழந்து 89 நிமிடங்களுக்குப் பிறகு தொடர்பை மீளப் பெற்றது. இந்த நிலையில் ப்ளூட்டோ கிரகத்தில் நான்கு கரும்படலம் வியாபித்து இருப்பததையும் அது கண்டுபிடித்துள்ளது. இந்த கருப்பு நிறப் பகுதி என்ன என்ற ஆய்வு தற்போது சூடு பிடித்துள்ளது.

நாசாவின் நியூ ஹாரிஸான்ஸ் என்ற விண்கலமானது ப்ளூட்டோ கிரகத்தை ஆராய்ந்து வருகிறது. இடையில் சற்று தொடர்பு துண்டிக்கப்ட்ட இந்த விண்கலம தற்போது சரியான முறையில் இயங்கி வருகிறது ஜூலை 7ம் தேதி முதல் இது முழு அளவில் இயங்க ஆரம்பித்துள்ளதாக கதவல்கள் கூறுகின்றன.

ஜூலை 14ம் தேதி இந்த விண்கலமானது ப்ளூட்டோவைக் கடந்து செல்லவுள்ளது.

நியூ ஹாரிஸான்ஸ்...

நியூ ஹாரிஸான்ஸ்...

ப்ளூட்டோவை ஆராய நாசா அனுப்பிய விண்கலம்தான் நியூ ஹாரிஸான்ஸ். இந்த விண்கலமானது ட்வார்ப் கிரகம் எனப்படும் ப்ளூட்டோவை ஆராய்ந்து வருகிறது. தற்போது இது நான்கு அடையாளம் தெரியாத கருப்புப் பகுதியை கண்டுபிடித்து படம் பிடித்து அனுப்பியுள்ளது.

மீண்டும் தொடர்பு...

மீண்டும் தொடர்பு...

இடையில் அது ஜூலை 4ம் தேதி திடீரென பூமியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. 89 நிமிடத்திற்குப் பின்னர் மீண்டும் தொடர்பு கிடைத்தது. தற்போது திட்டமிட்டபடி அது செயல்பட்டு வருகிறது.

புதிய புகைப்படங்கள்...

புதிய புகைப்படங்கள்...

ஜூலை 14ம் தேதி ப்ளூட்டோ கிரகத்தை நியூ ஹாரிஸான்ஸ் கடக்கவுள்ளது. இதற்கிடையே ப்ளூட்டோ குறித்து நியூஹாரிஸான்ஸ் லேட்டஸ்டாக அனுப்பிய புகைப்படங்கள் ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளன.

கருப்பு நிறப்பகுதிகள்...

கருப்பு நிறப்பகுதிகள்...

4 கருப்பு நிறப் பகுதிகள் இதில் முக்கியமானவை. இது என்ன என்ற ஆய்வும், ஆர்வமுவம் அதிகரித்துள்ளது. ஜூலை 1 மற்றும் 3ம் தேதிக்கு இடைப்பட்ட நாளில் இந்தப் படங்களை நியூ ஹாரிஸான்ஸ் அனுப்பியுள்ளது.

ஆய்வு...

ஆய்வு...

இந்த கருப்புப் பகுதியானது, ப்ளூட்டோ கிரகத்தின் நிலபரப்பை மூடிக் காணப்படும் கரும் பகுதியாக கருதப்படுகிறது. இந்த கருப்புப் பகுதியானது பல நூறு மைல் பரப்பளவிலானது என்று கருதப்படுகிறது. இதுகுறித்த ஆய்வு தற்போது முடுக்க விடப்பட்டுள்ளது.

ஜெட்டை விட வேகமானது...

ஜெட்டை விட வேகமானது...

நியூஹாரிஸான்ஸ் விண்கலமானது 2006ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. மணிக்கு 58,536 கிலோமீட்டர் என்ற வேகத்தில் இது பூமியிலிருந்து கிளம்பியது. ஒரு ஜெட் விமானத்தை விட 100 மடங்கு அதிவேகமானது இது.

ஆய்வு முடிவு...

ஆய்வு முடிவு...

ஜூலை 14ம் தேதி ப்ளூட்டோவை கடந்து செல்லும் ஹாரிஸான்ஸ் விண்கலமானது, அதன் பின்னர் பல கியூப்பர் பெல்ட் ஆப்ஜெக்ட்ஸ் குறித்தும், ப்ளூட்டோவின் பிற பகுதிகளையும் ஆராய உள்ளது. 2026ம் ஆண்டு இந்த ஆய்வு முடிவுக்கு வருகிறது.

English summary
Nasa scientists say they have fixed a glitch that saw them lose contact with the New Horizon’s space probe just days before its close encounter with Pluto - and have released a new image of four unknown 'black spots' on the dwarf planet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X