For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செவ்வாயில் 3 வித்தியாசமான பொருட்களை கண்டுபிடித்த ரோவர்.. நாசாவின் ஆராய்ச்சியில் திருப்பம்

செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அனுப்பிய ரோவர், தற்போது அங்கு சில முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    செவ்வாயில் வித்தியாசமான பொருட்களை கண்டுபிடித்த நாசாவின் ரோவர்

    நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அனுப்பிய ரோவர், தற்போது அங்கு சில முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உள்ளது. அங்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன் உயிர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை கண்டுபிடித்துள்ளது.

    செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா என்று பல காலமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா ஆகியவை இதில் அதிக ஆர்வம் காட்டுகிறது.

    இந்த நிலையில் நாசா தற்போது மிக முக்கியமான கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தி உள்ளது. இதுகுறித்து விரிவான ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட உள்ளது.

    நாசா ரோவர்

    நாசா ரோவர்

    செவ்வாய் கிரகத்திற்கு நாசா ஏற்கனவே ரோவர் அனுப்பி உள்ளது. இதன் பெயர் க்யூரியாசிட்டி. இது செவ்வாய் மீது நகர்ந்து செல்லும் சிறிய வாகனம் ஆகும். இந்த ரோவர் அங்கு சில ஆராய்ச்சிகளை செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. தற்போது செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளை நாசா துரிதப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக பல அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளது.

    மொத்தம்

    மொத்தம்

    தற்போது செவ்வாய் கிரகத்தில் பூமியில் இருப்பதை போலவே மூன்று பொருட்களை நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த மூன்று பொருட்களிலும் அதிக அளவில் மீத்தேன் இருந்துள்ளது. பெரும்பாலும் ஒரு காலத்தில் உயிர் இருந்த பொருட்களின் மீதிகளில்தான் மீத்தேன் வாயு இருக்கும் என்பதால், இந்த பொருட்களுக்கு உயிர் இருந்திருக்கலாம், சிறிய செடியோ, புற்களோ இருந்திருக்கலாம் என்று நாசா கூறியுள்ளது.

    எப்படி கண்டுபிடித்தது

    எப்படி கண்டுபிடித்தது

    நாசாவின் ரோவரானது, செவ்வாய் கிரகத்தின் நிலப்பகுதியை தோண்டி இருக்கிறது. ஆனால் பெரிய அளவில் தோண்டாமல், வெறும் 5 சென்டிமீட்டர்தான் தோண்டியுள்ளது. இதில்தான் இந்த மூன்று விதமான பொருட்கள் கிடைத்துள்ளது. இதை வைத்து இன்னும் பல மாதங்களுக்கு ஆராய்ச்சி செய்ய நாசா முடிவெடுத்துள்ளது.

    சூப்பர் ஐடியா

    சூப்பர் ஐடியா

    இந்த நிலையில் நாசா அமைப்பு சிறிய ரக நானோ ஹெலிகாப்டரை அனுப்ப உள்ளது. 2020ல் இந்த ஹெலிகாப்டர் அனுப்பப்படும் என்று கூறியுள்ளது.இதில் சிறிய ரக கேமராக்கள் உள்ளது. இது ஆராய்ச்சி செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பும். இது 2020ல் ஏவப்பட்டு 2021 செவ்வாயை அடையும். இதனுடன் இதை கட்டுப்படுத்துவதற்காக, ரோவர் ஒன்றும் அனுப்பப்பட உள்ளது. ரோவரின் ஆராய்ச்சிகளை பெரிய அளவில் செய்ய இது உதவும்.

    English summary
    Nasa's Curiosity rover finds three unique particles in Mars.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X