For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூரியனை தொட போகும் நாசா.. வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட கார் சைஸ் சாட்டிலைட்

சூரியனுக்கு மிக அருகில் செல்லும் வகையில் சாட்டிலைட் ஒன்றை நாசா தற்போது வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: சூரியனுக்கு மிக அருகில் செல்லும் வகையில் பார்க்கர் சோலர் புரோப் சாட்டிலைட்டை நாசா தற்போது வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.

உலகிலேயே இது மிக வேகமாக தயாரிக்கப்பட்ட விண்வெளி திட்டம் ஆகும். இதன் மூலம் நாசா உலக வரலாற்றில் புதிய மைக்கல்லை எட்டியுள்ளது.

இதுவரை சூரியனை இவ்வளவு அருகில் செல்லும் வகையில் யாரும் ராக்கெட்டை அனுப்பியதில்லை. இதை உலகமே பெரிய அளவில் கொண்டாடி வருகிறது.

 நாசா திட்டம்

நாசா திட்டம்

நாசா சூரியனுக்கு சாட்டிலைட் ஒன்றை அனுப்பியுள்ளது. பார்க்கர் சோலர் புரோப் என்று அழைக்கப்படும் இந்த சாட்டிலைட் போன்ற சாதனம், சூரியனை ஆராய்ச்சி செய்ய இருக்கிறது. மனிதர்கள் கண்டுபிடித்ததிலேயே சூரியனுக்கு மிக அருகில் செல்ல போகும் சாதனம் இதுதான். புதிய தொழில்நுட்பத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

 எவ்வளவு தூரம் செல்லும்

எவ்வளவு தூரம் செல்லும்

இதற்காக டெல்டா ஐவி என்ற பெரிய ராக்கெட்டை கண்டுபிடித்து இருக்கிறார்கள். உலகிலேயே அதிக சக்தி கொண்ட ராக்கெட் இதுதான். இதில் 4 ராக்கெட்டை வைத்து ஏவி இருக்கிறார்கள். இந்த ராக்கெட் மணிக்கு 6.9 லட்சம் கி.மீ வேகத்தில் செல்லும். இது சூரியனில் இருந்து 59.5 லட்சம் கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்படும்.

 ஆராய்ச்சி

ஆராய்ச்சி

சூரிய வெப்பத்தை தாங்க கார்பனால் ஆன வெளித்தகடு பொருத்தப்பட்டுள்ளது. இது 1,400 டிகிரி செல்சியஸ் வரையிலான சூரிய வெப்பத்தை தாங்கும். இதன் எடை 612 கிலோ ஆகும். அதேபோல் நீளம் 9 அடி, 10 இன்ச் கொண்டது. இது நேற்று ஏவப்பட்டுவதாக இருந்தது, ஆனால் கடைசி நேரத்தில் இதன் சேம்பர் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.

 வெற்றி வெற்றி

வெற்றி வெற்றி

இந்த நிலையில் இந்த சாட்டிலைட்டை இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. புளோரிடாவில் இருந்து, விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், நாசா இதன் பயன்பாட்டை மிகவும் ரகசியமாக வைத்து இருக்கிறது. இது அடுத்த நவம்பரில் சூரியன் அருகில் சென்றடையும்.

English summary
NASA plans for something bigger this time, A Car-Sized Probe will get closer to Sun. NASA's Car-Sized Probe set to launch to Sun today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X