For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூமியை போல புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 3 கோள்களில் உயிரினங்கள், பயிர்கள் உள்ளதா? நாசா பதில்

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமி போன்ற புதிய கிரகங்களை நாசா கண்டறிந்துள்ளது. இந்த 7 புதிய கிரகங்களில் மூன்றில், மனிதர்கள் வசிக்க்க கூடிய சூழல் உள்ளது என நாசா அறிவித்துள்ளது புருவத்தை உயர்த்தியுள்ளது.

நீர் ஆதாரம், காற்று என பூமியின் சூழல் அந்த மூன்று கோள்களில் உள்ளனவாம். அங்குள்ளதாக நாசா கூறுகிறது. இந்தப் புதிய கிரகங்கள் அளவிலும் கிட்டத்தட்ட பூமியை ஒத்து உள்ளன அல்லது அதை விட சற்று சிறிதாக உள்ளன.

இதுவரை மனிதர்கள் கண்டுபிடித்த கிரகங்களிலேயே இதுதான் சிறந்த கண்டுபிடிப்பு என்றும் நாசா வர்ணித்துளளது. காரணம் இந்த கிரகங்கள் கிட்டத்தட்ட பூமி போலவே உள்ளது.

சூரிய மண்டலம்

சூரிய மண்டலம்

இந்த புதிய கிரகங்கள் டிராப்பிஸ்ட் 1 என்ற நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. இதுதான் இந்த கோள்களின் சூரியன் எனவும் பொருள் கொள்ளலாம். இதுகுறித்து நாசா தகவல் வெளியிட்டபோது நாசாவுக்கு பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் முன் வைத்தனர்.

எவ்வளவு நாள் ஆகும்

எவ்வளவு நாள் ஆகும்

அதில் சில கேள்விகளையும், அதற்கான பதில்களையும் பாருங்கள்:

கே: புதிதாக கண்டறியப்பட்டுள்ள சூரிய குடும்பத்தை சென்று சேர தற்போதுள்ள தொழில்நுட்பத்தின் படி எவ்வளவு காலம் பிடிக்கும்?

ப: தற்போதுள்ள எந்த டெக்னாலஜியும், புதிய கோள் கூட்டங்களை சென்று சேரும் திறன்மிக்கவை கிடையாது. எனவேதான், விண்வெளி ஆய்வுக்கான டெலஸ்கோப்புகளை பயன்படுத்தி தொலைவிலிருந்தபடியே ஆய்வுகளை நடத்தி வருகிறோம்.

ஈர்ப்பு விசை எப்படி உள்ளது

ஈர்ப்பு விசை எப்படி உள்ளது

கே: பூமி, செவ்வாய் கிரகங்களில் காணப்படும் ஈர்ப்பு விசையுடன் ஒப்பிட்டால், உயிர்வாழ தகுதி வாய்ந்த இந்த 3 கோள்களின் நிலை எப்படி?

ப: ஈர்ப்பு விசை பற்றி அறிய வேண்டுமானால், அக்கோள்களின் நிறை மற்றும் ரேடியஸ் ஆகியவை குறித்து அறிய வேண்டும். இப்போது கிடைத்துள்ள தரவுகள் அடிப்படையில் பார்த்தால், இம்மூன்று கோள்களின் ஈர்ப்பு விசை, பூமியை ஒத்துப்போகிறது. இதில் கோள் எப்-க்கு மட்டும் விதி விலக்கு. ஏனெனில் இந்த கோள் பூமியை விட சுமார் 68 சதவீதம் ஈர்ப்பு விசை குறைந்ததாக தெரிகிறது.

உயிரினங்கள் உள்ளதா

உயிரினங்கள் உள்ளதா

கே: இந்த கோள்களில் உயிரினங்கள் பயிர், மரங்கள் வடிவில் இருக்கின்றன என்பதை அடுத்த 20-30 வருடங்களில், அதிகாரப்பூர்வமாக நாம் அறிந்து கொள்ள முடியுமா?

ப: இந்த கோள்களில் கடல், கண்டங்கள், பயிர்கள் போன்றவை உள்ளனவா என்பதை கண்டறிய நவீன டெலஸ்கோப்புகள் தேவை. அடுத்த வருடம் புதிதாக ஒரு டெலஸ்கோப்பை அறிமுகம் செய்ய உள்ளோம். அதைவிடவும் நவீன டெலஸ்கோப்புகளால் மட்டுமே இக்கோள்களில் உள்ள அம்சங்கள் பற்றி துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும். பிற நட்சத்திர கூட்டங்களில் இருந்து வெளிவரும் வெளிச்சத்தை அடக்கி, இக்கோள்களை பார்க்கும் வகையிலான அதி நவீன டெலஸ்கோப்புகள் அவசிய தேவையாகும். அதற்கு கால நேரம் தேவைப்படும்.

English summary
Everything You Need to Know About NASA’s Epic 7-Planet Discovery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X