For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புளூட்டோவின் பெரிய "சந்திரன்" சாரோன்.. கிட்டப் போய் கலர்புல்லாக "சுட்டு"த் தள்ளிய நியூ ஹாரிசான்ஸ்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: புளூட்டோ கிரகத்தின் மிகப்பெரிய சந்திரனான சாரோனை மிக அருகில் சென்று வண்ணமயமாக அதனைப் படமெடுத்து அனுப்பியுள்ளது நாசாவின் நியூ ஹாரிசான்ஸ் விண்கலம்.

சூரிய மண்டலத்தில் உள்ள 9 கிரகங்களில் ஒன்று புளூட்டோ. சிறிய கிரகமான புளூட்டோவை ஆராய நாசாவால் கடத 9 ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்டது நியூ ஹாரிசான்ஸ் என்ற விண்கலம்.

NASA’s New Horizons captures Pluto’s moon Charon in stunning detail

சமீபத்தில் புளூட்டோவிற்கு அருகில் சென்று அதனை பல்லாயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுத்தது நியூ ஹாரிசான்ஸ். அப்புகைப்படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பூமிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

அரிய தகவல்கள்...

அவற்றின் மூலம் புளூட்டோ மற்றும் அதன் சந்திரன்கள் குறித்துப் பல அரிய தகவல்களை விஞ்ஞானிகள் பெற்று வருகின்றன.

சாரோன்...

இந்நிலையில், கடந்த வாரம் நியூ ஹாரிசான்ஸ் அனுப்பிய புகைப்படத்தில் புளூட்டோவின் துணைக்கிரகமான சாரோன் இடம் பிடித்துள்ளது. புளூட்டோ கிரகத்திற்கு சாரோன் உட்பட 5 சந்திரன்கள் உள்ளன. ஆனால், அவற்றில் மிகப் பெரியது சாரோன் தான்.

பிளவுகள், கணவாய்கள்...

சாரோன் 1,214 கி.மீட்டர் பரப்பளவை கொண்டது. அதில், 0.8. கி.மீட்டர் அளவுள்ள பகுதி இப்போட்டோவில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அதேபோல், மற்றொரு போட்டோவில் சாரோனில் பிளவுகள் மற்றும் கணவாய்கள் இருப்பது பதிவாகியுள்ளது.

கடல் இருக்கலாம்...

புளூட்டோவை போன்று சாரோனில் பல்வேறு நிறங்கள் இல்லை. வடதுருவத்தில் சிவப்பு நிறம் சற்று அதிகமாக உள்ளது. எனவே, அங்கு உறைந்த கடல் இருப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக நியூ ஹாரிசன்ஸ் குழு உறுப்பினர் பால் சென்ச் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

English summary
NASA’s New Horizons spacecraft has returned the best colour and the highest resolution images yet of Pluto’s largest moon, Charon, which show a surprisingly complex and violent history.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X