For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூரியனுக்கு 11 லட்சம் மனிதர்களின் பெயரை சுமந்து செல்லும் நாசா ராக்கெட்.. சுவாரசிய தகவல்கள்

சூரியனுக்கு மிக அருகில் செல்லும் வகையில் சாட்டிலைட் ஒன்றை நாசா தற்போது வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: சூரியனுக்கு மிக அருகில் செல்லும் பார்க்கர் சோலர் புரோப் சாட்டிலைட், 10 லட்சத்திற்கும் அதிகமான மனிதர்களின் பெயர்களை சூரியனுக்கு கொண்டு செல்கிறது. அதேபோல் இது பல சுவாரசியமான விஷயங்களை உள்ளடக்கி உள்ளது.

சூரியனுக்கு மிக அருகில் செல்லும் வகையில் பார்க்கர் சோலர் புரோப் சாட்டிலைட்டை நாசா தற்போது வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.இதன் மூலம் நாசா உலக வரலாற்றில் புதிய மைக்கல்லை எட்டியுள்ளது.

இதை உலகமே பெரிய அளவில் கொண்டாடி வருகிறது. இதுவரை சூரியனை இவ்வளவு அருகில் செல்லும் வகையில் யாரும் ராக்கெட்டை அனுப்பியதில்லை.

அதிவேகம்

உலகில் மனிதர்கள் உருவாக்கியதிலேயே மிக அதிக வேகத்தில் உருவாக்கப்பட்ட விண்வெளி திட்டம் இதுதான். இதை முழுக்க முழுக்க சாட்டிலைட் என்று சுருக்கி விட முடியாது. இது சாட்டிலைட் செய்யும் பணிகளையும் தாண்டி நிறைய பணிகளை செய்கிறது. சோலார் காற்று குறித்து ஆராய்ச்சி செய்த விண்வெளி ஆராய்ச்சி நிபுணர் பார்க்கர் நினைவாக இதற்கு பார்க்கர் சோலர் புரோப் சாட்டிலைட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

என்ன திறன்

இது மொத்தம் ஒரு மணி நேரத்தில் 430,000 மைல்கல் தூரம் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகிலேயே பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு வெளியே மனிதர்கள் உருவாக்கிய பொருள் ஒன்று இவ்வளவு வேகத்தில் செல்வது இதுவே முதல்முறை. இது 7 வருடம் சூரியனை ஆராயும் என்று கூறப்படுகிறது. 7 வருடமும் சூரியனை நிலையாக ஆராய்ச்சி செய்யும்.

மிக அருகில்

இதற்காக டெல்டா ஐவி என்ற பெரிய ராக்கெட்டை கண்டுபிடித்து இருக்கிறார்கள். உலகிலேயே அதிக சக்தி கொண்ட ராக்கெட் இதுதான். இதில் 4 ராக்கெட்டை வைத்து ஏவி இருக்கிறார்கள். இது சூரியனில் இருந்து 59.5 லட்சம் கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்படும். சூரியனுக்கு மிக அருகில் செல்லும் மனிதன் உருவாக்கிய பொருள் இதுதான்.

எப்போது

இந்த ராக்கெட், இந்த வருடம் நவம்பரில் சூரியனுக்கு அருகில் திட்டமிடப்பட்ட இடத்திற்கு சென்றுவிடும். இந்திய மதிப்பில் இதற்கு ரூபாய் 10 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. சூரியனின் கரோனா பகுதியை சுற்றி வர போகும் முதல் விண்கலம் இதுதான்.

இத்தனை பெயர்கள்

இதில் ஆச்சர்யமாக 11 லட்சம் மனிதர்களின் பெயர்கள் கொண்டு செல்லப்படுகிறது. சரியாக 1,137,202 பெயர்கள் கொண்டு செல்லப்படுகிறது. அந்த சாட்டிலைட்டில் ஒரு மெமரி கார்ட் உள்ளது. அதில் இந்த பெயர்கள் ஏற்றப்பட்டுள்ளது. இதற்காக பெயர்களை பரிந்துரைக்க அறிவியல் பத்திரிக்கைகளில் நாசா முன்பே விளம்பரம் கொடுத்து இருந்தது.

English summary
NASA's Parker Solar Probe blasts off to space with 11 lakh human names.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X