For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ப்ளூட்டோவுக்கு பெயர் வைத்தது யார் தெரியுமா?

Google Oneindia Tamil News

நாசா: ப்ளூட்டோ கிரகத்தைக் கடந்து நாசா விண்கலம் புதிய வரலாறு படைக்கவுள்ளது. இந்த நிலையில் அந்த ப்ளூட்டோவுக்கு அந்தப் பெயரை வைத்தது யார் என்பது குறித்த சுவாரஸ்யத் தகவல் வெளியாகியுள்ளது.

வெனிஷியா பர்னி என்பவர்தான் ப்ளூட்டோ என்று பெயர் வைத்தவர் ஆவார். அந்தப் பெயரை அவர் வைத்தபோது அவருக்கு வயது 11 மட்டுமே. ஆம், ஒரு சிறுமிதான் ப்ளூட்டோவுக்குப் பெயர் சூட்டிய பெருமைக்குரியவர்.

NASA's Pluto flypast and the Oxford schoolgirl who named it

1930ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி காலையில், வடக்கு ஆக்ஸ்போர்ட் நகரில் உள்ள தனது இல்லத்தில், டைம்ஸ் இதழைப் படித்துக் கொண்டிருந்த பால்கோனர் மடன், செய்தித் தாளில் புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார். அதை தனது பேத்தி வெனிஷியாவுக்கும் கூறினார்.

வெனிஷியா வயதில் சிறிய பெண்ணாக இருந்தாலும் கூட கிரேக்க, ரோம வரலாறு குறித்த ஆழ்ந்த அறிவும், ஈடுபாடும் கொண்ட சிறுமி. எனவே அந்தக் கிரகத்திற்கு ப்ளுட்டோ என பெயர் சூட்டலாம் என தனது தாத்தாவிடம் கூறினாள் வெனிஷியா.

இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட தாத்தா, உடனடிடியாக விண்வெளி ஆய்வாளர் ஹெர்பெர்ட் ஹால் டர்னருக்கு இதுகுறித்து கடிதம் எழுதினார். அவர் தனது சகாக்களுக்கு இதைத் தெரிவித்தார்.

அனைவருக்கும் அந்தப் பெயர் பிடித்து விட்டது. இதையடுத்து ப்ளுட்டோ என்ற பெயர் சூட்டப்படுவதாக 1930ம் ஆண்டு மே 1ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இப்படி ப்ளூட்டோ கிரகத்திற்குப் பெயர் சூட்டியவரான வெனிஷியா 2009ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி சுர்ரே நகரில் மரணமடைந்தார். வெனிஷியா குறித்து 2007ம் ஆண்டு ஒரு குறும்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

English summary
As NASA prepares for this week's historic Pluto flypast, here's the true story of how the former planet came to be named.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X