For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவை புரட்டிப் போடும் 'ஸ்வாலா'.. இந்தியாவிற்கு காத்திருக்கிறது வெள்ள அபாயம்.. நாசா வார்னிங்

சீனாவின் தென் பகுதியில் வீசிக்கொண்டிருக்கும் புயல் காரணமாக இந்த வருடம் இந்தியாவில் அதிக அளவில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: சீனாவின் கடந்த சில மாதங்களாக மாறி மாறி புயல் விசுக் கொண்டே இருக்கிறது. தற்போது அங்கு வீசிக்கொண்டிருக்கும் புயலுக்கு 'ஸ்வாலா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் அங்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

சீனாவின் தென் பகுதியில் வீசிக்கொண்டிருக்கும் புயல் காரணமாக இந்த வருடம் இந்தியாவில் அதிக அளவில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது. பருவமழை தாமதமாக ஆரம்பித்தாலும் மழை அளவு அதிகமாக இருக்கும் என்றும் நாசா அறிவித்துள்ளது.

தற்போது சீனாவில் வீசிக்கொண்டிருக்கும் இந்த ஸ்வாலா புயல் ஜப்பான் கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

 சீனாவில் சில மாதங்களாக புயல்

சீனாவில் சில மாதங்களாக புயல்

சீனாவில் கடந்த சில மாதங்களாக அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து புயல் வீசி வருகிறது. ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் அங்கு புதிய புயல் ஒன்று உருவாக்கி வீசி வருவதாக கூறப்படுகிறது. தற்போது அங்கு வீசிக்கொண்டிருக்கும் புயலுக்கு 'ஸ்வாலா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் அங்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 இந்தியாவில் பருவமழை

இந்தியாவில் பருவமழை

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, அக்., 20ல் துவங்கும். சென்ற வருடம் கூட இந்த சுழற்சி மிகவும் சரியாகவே இருந்து வந்தது. ஆனால் இந்த வருடம் இதில் சிறிய அளவில் மாற்றம் ஏற்பட்டு கொஞ்சம் தாமதமாக மழை பெய்ய துவங்கி இருக்கிறது. இன்னும் எந்தப் பகுதியிலும் மழை தீவிரம் அடையவில்லை. தற்போது இதற்கு தென் சீனாவில் நிலவி புயல் காரணமாக இருக்கலாம் கூறப்படுகிறது. இது குறித்து நாசா அறிக்கை விடுத்துள்ளது.

 நாசா அதிர்ச்சி தகவல்

நாசா அதிர்ச்சி தகவல்

சீனாவின் தென் பகுதியில் வீசி வரும் ஸ்வாலா புயல் காரணமாக இந்த வருடம் இந்தியாவில் அதிக அளவில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது. பருவமழை தாமதமாக ஆரம்பித்தாலும் மழை அளவு அதிகமாக இருக்கும் என்றும் நாசா அறிவித்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் இந்த மழை பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தென்னிந்தியாவில் வெள்ளம் வருவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 புயலில் தற்போதைய நிலை

புயலில் தற்போதைய நிலை

தற்போது சீனாவில் வீசிக்கொண்டிருக்கும் இந்த ஸ்வாலா புயல் நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டே செல்கிறது. மேலும் இந்த புயல் தற்போது மெதுவாக ஜப்பான் கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி ஜப்படன் கடல் பகுதியை நோக்கி நகர்வதால் இந்தியாவில் மழை அதிகம் ஆகும் என கூறப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. இதன் மூலம் பாதிப்புகள் மிக அதிக அளவில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

English summary
A new storm is forming in the South China Sea and expected to move westwards across the Gulf of Thailand and hit the Japan. NASA says it will create a huge problem in India's rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X