For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளைக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடுகிறது நாசா.. உலகமே எதிர்பார்ப்பு

புதிதாக நாசா அறிவிக்கப்போவது எதைப்பற்றி என்ற வாத, விவாதங்கள் உலகமெங்கும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. நாசா புதிய கண்டுபிடிப்பு Nature இதழிலும் வெளியாகும்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நாளை ஒரு முக்கியமான தகவலை வெளியிடப்போவதாக நாசா அறிவித்தாலும் அறிவித்தது, இப்போது உலகமெங்குமுள்ள வானவியல் ஆர்வலர்கள் மத்தியில் இதுகுறித்த பேச்சும், விவாதமும் ஊற்றெடுத்துள்ளது.

வின்வெளி ஆய்வு அமைப்பான நாசா, நாளை அமெரிக்க நேரப்படி பிற்பகலில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்புவிடுத்துள்ளது. அதில் முக்கியமான ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக பீடிகை கொடுக்கப்பட்டுள்ளது.

NASA says it has some big news to tell the world.

பிரஸ் மீட் நடக்கும்போது, #askNASA என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பொதுமக்களும் கூட நாசா விஞ்ஞானிகளிடம் கேள்வி எழுப்பலாம்.

புதிதாக நாசா அறிவிக்கப்போவது எதைப்பற்றி என்ற வாத, விவாதங்கள் உலகமெங்கும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. நாசா புதிய கண்டுபிடிப்பு Nature இதழிலும் வெளியாகும். ஆனால், பிரஸ் மீட் நடைபெறும் வரை அந்த இதழ் வெளியிடப்படாது.

நாசா இத்தகவலை reddit தளத்தில் வெளியிட்டதும், அதன் கமெண்ட் பகுதி நிரம்பி வழிய தொடங்கியுள்ளது. மக்கள் ஒருவருக்கொருவர் அது என்ன கண்டுபிடிப்பாக இருக்கும் என கருத்துக்களை கூறி வருகிறார்கள். புதிய கோள்களை நாசா கண்டுபிடித்துள்ளதா அல்லது புதிய நட்சத்திரங்களை கண்டுபிடித்து்ள்ளதா, இல்லை புதிய சூரியன் ஒன்றையை கண்டுபிடித்துவிட்டதா என்பது குறித்தெல்லம் யூகங்கள் வலம் வருகின்றன.

English summary
NASA has been stingy with the details so far but the press conference is being touted as the biggest news related to exoplanets since the announcement last year of an earth-like planet orbiting our closest star, dubbed Proxima Centauri.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X