For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

20,000 கிரகங்களை ஸ்கேன் செய்யும் நாசா.. உதவிக்கு வந்த ஸ்பேஸ் எக்ஸ்.. உயிரினங்களை கண்டுபிடிக்க பிளான்

நாசா நிறுவனம் வானத்தில் இருக்கும் கிரகங்களை ஸ்கேன் செய்வதற்காக டெஸ் என்று சாட்டிலைட்டை அனுப்பி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    வானத்தில் இருக்கும் கிரகங்களை ஸ்கேன் செய்யும் நாசா நிறுவனம்- வீடியோ

    நியூயார்க்: நாசா நிறுவனம் வானத்தில் இருக்கும் கிரகங்களை ஸ்கேன் செய்வதற்காக டெஸ் என்று சாட்டிலைட்டை அனுப்பி இருக்கிறது.

    நேற்று இந்த சாட்டிலைட் அனுப்பப்பட்டது. இதற்காக 337 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது. வானத்தில் உள்ள 85 சதவிகித பகுதிகளை இது ஸ்கேன் செய்யும்.

    வாஷிங் மிஷின் அளவில் இருக்கும் இந்த சாட்டிலைட் வானத்தில் இருக்கும் கிரகங்களை ஸ்கேன் செய்து முடிக்கும் வரை அங்கேயே சுற்றிக் கொண்டு இருக்கும். இது விண்வெளி துறையில் மிகப்பெரிய புரட்சிகளை செய்ய இருக்கிறது.

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

    இந்த டெஸ் சாட்டிலைட், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டு இருக்கிறது.நாசா இனிவரும் நாட்களில், ராக்கெட்டுகளை தயாரிக்க வாய்ப்பில்லை. இது போல சாட்டிலைட்டுகள் மட்டும் தயாரித்து, இதுபோல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ''பல்கான் ஹெவி'' ராக்கெட் மூலம் விண்ணில் ஏவும். நேற்று அனுப்பப்பட்ட டெஸ் சாட்டிலைட் இப்படி பல்கான் ஹெவி மூலம் அனுப்பப்பட்டதே.

    வானத்தை ஸ்கேன் செய்யும்

    வானத்தை ஸ்கேன் செய்யும்

    இந்த டெஸ் சாட்டிலைட் வானத்தில் இருக்கும் சிறு சிறு கிரகங்களை எல்லாம் ஸ்கேன் செய்யும். மொத்தமாக சூரிய குடும்பத்திற்கு வெளியே இருக்கும் 20,000 கிரகங்களை ஸ்கேன் செய்யும். இதில் 50 கிரகங்கள் பூமியின் அளவில் உள்ளது. 500 கிரகங்கள் பூமியை விட சிறிய அளவில் இருக்கும். மற்ற கிரகங்கள் வெவ்வேறு வடிவத்தில் இருக்கும்.

    எதை ஸ்கேன்

    எதை ஸ்கேன்

    வானத்தில் இருக்கும் கிரங்களை ஆராய்ச்சி செய்ய ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. இந்த கிரகங்கங்களில் ஏதேனும் உயிரினம் இருக்கிறதா என்று சோதனை செய்து பார்க்கும். இன்னும் பல வருடங்களுக்கு இந்த சோதனை நடக்கும். ஒவ்வொரு கிரகத்தையும் முழுதாக சோதனை செய்த பின் பூமிக்கு விவரம் அனுப்பும். ஜெராக்ஸ் கடையில் ஸ்கேன் செய்வது போலவே இது கிரகங்களை செய்யும்.

    சிறிய கேமரா

    சிறிய கேமரா

    இதில் சிறிய கேமராக்கள் நான்கு பொருத்தப்பட்டு இருக்கிறது. வெவ்வேறு திசைகளில் இந்த கேமரா வைக்கப்பட்டு இருக்கும் . இதன் அளவும் செண்டிமீட்டர் கணக்கில்தான் இருக்கும். ஆனால் இது உலகில் இதுவரை செய்யப்பட்ட கேமராக்களை விட மிகவும் வலிமையானது என்று நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. எந்த கிரகத்தின் சிறிய துகளையும் இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும்.

    English summary
    NASA sent TESS, which is scanning satellite for scanning planets in the universe to find living species. It will scan nearly 20,000 planets in the universe for living organisms.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X