For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூரியனை சற்று கிட்ட நெருங்கி எட்டிப் பார்த்த நாசா.. அசத்தும் புதிய படங்கள்

Google Oneindia Tamil News

நாசா: சூரியனை மிக அருகில் படம் பிடித்து வெளியிட்டு உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது நாசா.

இந்தப் படங்களை தற்போது அது தனது கோடார்ட் விண்வெளி மையத்தில் காட்சிக்கு வைத்துள்ளது. சோலார் டைனமிக்ஸ் என்ற தனது தொலைநோக்கி மூலம் இந்தப் படத்தை அது எடுத்துள்ளது.

மிகப் பெரிய நட்சத்திரமான சூரியன் பூமியிலிருந்து 150 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சூரியனின் வெப்பத்தை இங்கிருந்தபடியே நம்மால் உணர முடியும்போது அருகில் சென்று பார்ப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

நாசா...

நாசா...

இந்த நிலையில் தனது சோலார் டைனிமிக்ஸ் தொலைநோக்கி மூலம் சூரியனை வெகு அருகாக படம் பிடித்துள்ளது நாசா. இந்த தொலைநோக்கியானது விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகும்.

அட்டகாசமான படங்கள்...

அட்டகாசமான படங்கள்...

பொதுமக்களுக்கும் இந்தப் படங்களை வெளியிட்டுள்ளது நாசா. இந்தப் படங்கள் அட்டகாசமாக இருப்பதாகவும், பல புதிய தகவல்களுடன் கூடியதாகவும் உள்ளதாக கோடார்ட் விண்வெளி மைய அதிகாரி டாக்டர் அலெக்ஸ் யங் கூறியுள்ளார்.

புதிய பரிமாணங்கள்...

புதிய பரிமாணங்கள்...

சூரியன் குறித்த பல புதிய பரிமாணத் தகவல்களை பொதுமக்கள் அறிய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அட்லஸ் 5...

அட்லஸ் 5...

அட்லஸ் 5 ராக்கெட் மூலம் இந்த சோலார் டைனமிக்ஸ் தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு இது செலுத்தப்பட்டது.

அதி நவீன கேமராக்கள்...

அதி நவீன கேமராக்கள்...

அது முதல் அது பல படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. அதன் அதி நவீன கேமராக்கள் சூரியனை பல கோணத்தில் படம் பிடித்த அனுப்புகின்றன.

புதிய தகவல்கள்...

புதிய தகவல்கள்...

மேலும் பல புதிய தகவல்களையும் பதிவு செய்து அனுப்புகின்றன. சூரியனில் நடைபெறும் நிகழ்வுகள், கொந்தளிப்புகள் உள்ளிட்டவற்றையும் அது படம் எடுத்து அனுப்புகிறது.

பிளாஸ்மா வளையம்...

பிளாஸ்மா வளையம்...

சூரியனில் உள்ள பிளாஸ்மா வளையங்களையும் துல்லியமாக படம் பிடித்து அனுப்புகிறது இந்த தொலைநோக்கி. இது காந்தப் புலங்களாகும்.

1000 மடங்கு வலிமையானது...

1000 மடங்கு வலிமையானது...

சாதாராண காந்தத்தை விட பல ஆயிரம் மடங்கு வலிமையானது இந்த காந்தப் புலங்கள். அதிலிருந்து அதி சூடான வாயுக்குள் வெளியேறுகின்றன. அதைத் தொடர்ந்து மிக மிக பிரகாசமான வெளிச்சமும் கிளம்பி வியாபிக்கிறதுஎ ன்று விலக்கினார் யங்.

English summary
NASA is showcasing high-definition images of the Sun taken by the Solar Dynamics Observatory in an exhibit at the Goddard Space Flight Center in the US.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X