For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பசிபிக், இந்தியப் பெருங்கடலுக்கு அடியில் பதுங்கியிருக்கும் பயங்கர வெப்பம்.. பீதி கிளப்பும் நாசா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கடலுக்கு அடியில் 300 முதல் 1000 அடி ஆழத்தில் மிகப் பயங்கரமான வெப்பம் மறைந்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த வெப்பத்தின் அளவானது முன்பு நினைத்ததை விட அதிகமாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் பீதி கிளப்புகிறார்கள்.

கடலின் வெப்ப நிலையானது தற்போது உள்ளதை விட மிக அதிக அளவில் இருக்கும் என்பதும் விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

உண்மையில், இந்த வெப்பத்தையும், உலகளாவிய பூமி வெப்பமயதாலையும், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் வீசும் சக்தி வாய்ந்த காற்று தடுப்பதாகவும் மறைப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

கூடுதல் வெப்பம்...

கூடுதல் வெப்பம்...

மேலும் தற்போது விஞ்ஞானிகள் அளவிட்டுள்ள உலக வெப்பமயமாதல் என்பது தற்போது அளவிட்டுள்ளதை விட மிகக் கூடுதலாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

முடக்கம்...

முடக்கம்...

கடந்த 15 ஆண்டுகளில் பூமியின் தரைப்பரப்பு வெப்பநிலையானது 0.05 டிகிரி சென்டிகிரேட் ஆக உயர்ந்துள்ளது. தற்போது வெப்பமயமாதலில் சற்று முடக்கம் நிலவுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடலுக்கும், பூமிக்கும் இடையிலான வெப்பநிலை மாற்றத்திற்கான காரணம் குறித்த ஆய்வும் முடுக்க விடப்பட்டுள்ளது.

குளிர் காற்று...

குளிர் காற்று...

தென் அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலிய நோக்க வீசி வரும் குளிர் காற்று காரணமாக தரைப்பரப்பு வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது. அதாவது 0.1 டிகிரி முதல் 0.2 டிகிரி வரை இது குறைந்து காணப்படுகிறது.

கடலுக்கு அடியில்...

கடலுக்கு அடியில்...

இந்த நிலையில்தான் கடலுக்கு அடியில் மிக அதிக அளவிலான வெப்பம் மறைந்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது மேலே வரும்போது மிகப் பெரிய அளவிலான உலக வெப்பமயாதல் ஏற்படும் என்பதும் அவர்களது கருத்தாகும்.

வெப்பநீர்...

வெப்பநீர்...

இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் கடலுக்கு அடியே 1000 அடி அளவில் இந்த வெப்பநிலை நிலவுவதாகவு்ம், அது அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளனர் விஞ்ஞானிகள். இந்த வெப்ப நீரானது மேலே வரும்போது பூமியின் வெப்ப நிலையும் கூட மாறுவதாக இவர்கள் கூறுகிறார்கள்.

எதிர்பார்த்ததை விட அதிகம்...

எதிர்பார்த்ததை விட அதிகம்...

மேலும் பூமி வெப்பமயமாதல் என்பது நாம் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் இருக்கலாம் என்றும், நமக்குத் தெரியாதது நிறையவே இருக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் வாதமாகும்.

English summary
Powerful winds in the Pacific and Indian oceans are hiding the effects of global warming. This is according to a new report that claims the so-called 'pause' in climate change never took place – scientists just haven't been digging deep enough.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X