For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி ‘அந்த’ப் பிரச்சினையில்லை... விண்வெளி வீரர்களுக்காக நாசா தயாரித்துள்ள ஸ்பெஷல் உடை!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: விண்வெளி வீரர்களுக்காக "டாய்லெட்"ட்டுன் கூடிய புதிய விண்வெளி உடையை நாசா தயாரித்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பூமி, நிலா, மற்ற கிரகங்கள், நட்சத்திரங்கள் குறித்து செயற்கைக்கோள்கள் அனுப்பியும், விண்வெளி வீரர்களைக் கொண்டும் அது ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

கழிவை அகற்றுவதில் சிக்கல்

கழிவை அகற்றுவதில் சிக்கல்

ஆனால், விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் அங்கு சந்திக்கும் பிரச்சினைகளில் பிரதானமான ஒன்று கழிப்பறை பிரச்சினை ஆகும். இதனாலேயே அவர்கள் அங்கு தண்ணீர் மற்றும் உணவு எடுத்துக் கொள்ளும் அளவு குறைவாக உள்ளது. இந்நிலையில் இதற்கு தற்போது ஒரு தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள்.

பிரத்யேக டாய்லெட்

பிரத்யேக டாய்லெட்

விண்வெளியில் நெடுந்தூரப் பயணங்களுக்கு மனிதர்களைக் கொண்டு செல்லும் முயற்சியாக ஓரியான் என்ற விண்வெளி ஓடத்தை நாசா தயாரித்து வருகிறது. இந்நிலையில், அதில் பயணிக்க உள்ள விண்வெளி வீரர்களுக்கென பிரத்யேக உடை ஒன்றை அது உருவாக்கியுள்ளது.

6 நாட்களுக்கு யூஸ் பண்ணலாம்

6 நாட்களுக்கு யூஸ் பண்ணலாம்

இந்த உடையில் கழிவகற்றும் பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த உடையை அணிந்து கொள்ளும் விண்வெளி வீரர்கள் ஆறு நாட்கள் வரை கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது எனக் கூறப்படுகிறது. அதோடு இந்த உடையின் மற்றொரு சிறப்பம்சம், விண்வெளி ஓடத்தில் காற்றழுத்தப் பிரச்சினை ஏற்பட்டாலும், அதன் பாதிப்பு சம்பந்தப்பட்ட வீரருக்கு இருக்காது.

டியூப் மாதிரி இருக்கும்

டியூப் மாதிரி இருக்கும்

இதுகுறித்து நாசா பொறியாளர் க்ரிஷ்டின் ஜான்சன் கூறுகையில், "இந்த பிரத்யேக உடையில் சிறுநீர் கழிப்பதற்கு ஆணுறை மாதிரி ஒரு இணைப்பு உள்ளது. இதில் டுயூப் மாதிரி வடிவமைப்பு உள்ளதால், அதன் வழியே கழிவுகள் வெளியேறும். இந்த ஆடையை ஓரியன் விண்தளம் விரைவில் வெளியிட உள்ளது" என்கிறார்.

தற்போது பயன்பாட்டில் உள்ள விண்வெளி உடைகளில் உள்ள குறைபாடுகளை களையும் விதத்தில் இந்தப் புதிய உடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் நாசா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
NASA scientists are developing a new spacesuit that includes a waste-disposal system, which will allow astronauts to remain in their spacesuits for up to six days in case of emergencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X