For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆயிரம் வருடம் பழமையான நடராஜர் சிலையை திருப்பிதர ஆஸ்திரேலியா சம்மதம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

மெல்பர்ன்: தமிழகத்தை சேர்ந்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து, நடராஜர் சிலையை சிலை கடத்தல்காரர்களிடமிருந்து வாங்கிய ஆஸ்திரேலியா அதை மீண்டும் இந்தியாவிடமே அளிக்க முன்வந்துள்ளது.

கான்பரா கேலரியில்...

கான்பரா கேலரியில்...

ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் அந்த நாட்டின் தேசிய கேலரி இயங்கிவருகிறது. இங்கு உலகின் பல பகுதிகளையும் சேர்ந்த அரிய பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த சுபாஷ்கபூர் என்ற பாரம்பரிய பொருட்களை விற்பனை செய்யு டீலரிடமிருந்து 5.6 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் பணம் கொடுத்து ஆஸ்திரேலிய கேலரி வெங்கலத்தால் செய்த நடராஜர் சிலையை வாங்கியுள்ளது. அதை தனது கேலரியில் காட்சிக்கும் வைத்துள்ளது.

சுபாஷ்கபூர் கைது

சுபாஷ்கபூர் கைது

2012ம் ஆண்டு சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ்கபூரை போலீசார் கைது செய்தபோது, ஆஸ்திரேலிய கேலரிக்கு நடராஜர் சிலையை விற்பனை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இவர் மீதான வழக்கு தமிழகத்தில் நடந்துவருகிறது.

அரிலூர் கிராமத்தின் கோயிலில் இருந்து திருடி...

அரிலூர் கிராமத்தின் கோயிலில் இருந்து திருடி...

ஆஸ்திரேலிய கேலரிக்கு சுபாஷ்கபூர் விற்ற நடராஜர் சிலை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அரிலூர் மாவட்டம் ஸ்ரீபுரன்தான் கிராமத்தின் கோயிலில் இருந்து இச்சிலை திருடிச் செல்லப்பட்டிருந்தது.

மீண்டும் கிராமத்துக்கு..

மீண்டும் கிராமத்துக்கு..

இதையடுத்து இந்தியா அந்த சிலையை திருப்பிக்கொடுக்குமாறு ஆஸ்திரேலிய கேலரியை கேட்டுக்கொண்டது. இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் சிலையை திருப்பி அளிக்க ஆஸ்திரேலிய கேலரி ஒப்புக்கொண்டுள்ளது. கூடிய விரைவில் தங்களது கிராமத்திற்கே திரும்பி வரும் நடராஜர் சிலையை பார்க்க ஸ்ரீபுரன்தான் கிராம மக்கள் ஆர்வமாக உள்ளனர். மீண்டும் கோயிலில் பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடத்த முடிவு செய்துள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.

English summary
The National Gallery of Australia has surrendered to the Indian claim that a Chola-era Nataraja had indeed been stolen from a village temple in Tamil Nadu, paving the way for an early return of the idol to India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X