For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதினை விமர்சித்தவர்..ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் கைதை கண்டித்து..போராட்டம், வன்முறை..போலீசார் தடியடி!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: கைது செய்யப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நாவல்னியை விடுவிக்கக் கோரி ரஷ்யா முழுவதும் பெரும்பாலான இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

பல இடங்களில் காவல்துறையினர் தடியடி நடத்திய நிலையில், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. காவல்துறை அதிகாரிகள் சிலரும் காயமடைந்தனர்.

தேனியில் வெளுத்து வாங்கிய மழை...நிரம்பி வழியும் அணைகள் தேனியில் வெளுத்து வாங்கிய மழை...நிரம்பி வழியும் அணைகள்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் நாவல்னி, அதிபர் விளாதிமிர் புதின் மீது ல்வேறு விமர்சனங்களை முன்வைத்தவர் ஆவார்.

புதின் மீது விமர்சனம்

புதின் மீது விமர்சனம்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவராக இருந்து வருபவர் அலெக்ஸி நாவல்னி. இவர் புதின் அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தவர். புதின் அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்ததால் விமானத்தில் சென்றபோது நாவல்னி திடீரென மயங்கி விழுந்தார்.

கைது செய்யப்பட்டார்

கைது செய்யப்பட்டார்

அவரது உணவில் உணவில் விஷம் வைக்கப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கோமா நிலைக்கு சென்ற அலெக்ஸி நாவல்னி, ஜெர்மனியில் சிகிச்சை பெற்று நாட்டுக்கு திரும்பினார். ஜெர்மனி அழைத்து செல்லப்பட்ட நாவல்னி அண்மையில் ரஷ்யா திரும்பினார். பழைய வழக்கு ஒன்றில் ஜாமீன் பெற்றிருந்த நாவல்னி, முறையான விசாரணைக்கு ஆஜராக நிலையில், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

போராட்டம் நடத்தினார்கள்

போராட்டம் நடத்தினார்கள்

கைது செய்யப்பட்ட நாவல்னியை விடுவிக்கக் கோரி ரஷ்யா முழுவதும் பெரும்பாலான இடங்களில் போராட்டங்கள் நடந்தன. தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட பல இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். கொரோனா அச்சுறுத்தும் வகையில் இருப்பதால் கலைந்து செல்லும்படி போராட்டக்காரர்களை போலீசார் எச்சரித்தனர். ஆனாலும் போலீசாரின் தடையையும், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

போலீசார் காயம்

போலீசார் காயம்

பல இடங்களில் காவல்துறையினர் தடியடி நடத்திய நிலையில், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. மாஸ்கோவில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் சிலரும் காயமடைந்தனர். இதுதொடர்பாக 2,000-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

English summary
Protests took place in most parts of Russia demanding the release of the arrested Russian opposition leader Navalny
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X