For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா சுட்டுக் கொன்ற தீவிரவாதி புர்கான் வானிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அஞ்சலி

காஷ்மீரில் கடந்த ஆண்டு ஜூலை 8ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்கான் வானிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதி புர்கான் வானியின் முதலாமாண்டு நினைவு தினத்தன்று இஸ்லாமாபத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் புர்கான் புகைப்படத்துக்கு அஞலி செலுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதி புர்கான் வானி கடந்த ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனால் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பெரும் கலவரம் வெடித்தது. புர்கான் வானியின் இறுதி ஊர்வலத்தில் பல ஆயிரம் மக்கள் கலந்துகொண்டனர்.

 Nawaz sharif paid homage to terrorist Burhan Wani

புர்கான் வானி, ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் கொள்கைகளை இணையத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இதனால் அவரை காஷ்மீர் இளைஞர்கள், மாணவர்கள் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டனர்.

ஜூலை 8, 2016 அன்று அவர் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு எழுந்த கலவரத்தில் ஆயிரக்காணக்கான இளைஞர்கள் சாலைக்கு வந்து பாதுகாப்புப் படையினருடன் மோதினர். அப்போது அவர்களை ஒடுக்க பெல்லட் குண்டுகள் பயன்படுத்தியதில் பலரது கண்கள், கழுத்துகளில் குண்டு பட்டு காயமடைந்தனர். பிறகு உச்சநீதிமன்றமே மத்திய அரசிடம் பெல்லட் குண்டுகளை பயன்படுத்த வேண்டாம் என கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் புர்கான் வானியின் முதல் நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வாவும் புர்கான் படத்துக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

English summary
Hizbul Mujahideen terrorist Burhan wani killed last year on July 8th. On his first death anniversary Pakistan PM Nawaz paid homage to Burhan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X