For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை.. நீதிமன்றம் அதிரடி!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பனாமா கேட் ஊழல் உள்ளிட்ட சில முக்கியமான வழக்குகள் நவாஸ் ஷெரீப் மீது உள்ளது. இந்த வழக்குகள் காரணமாக இவரின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டது. பனாமா கேட் ஊழல் உள்ளிட்ட பல வழக்குகளின் கீழ் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Nawaz Sharif sentenced to 7 years in jail in NAB reference case

ஊழல் செய்து வெளிநாட்டில் பணம் பதுக்கியதாகவும், வெளிநாட்டில் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக அவரது பிரதமர் பதவி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் பறிக்கப்பட்டது. அவரை நாடுகடத்தும் திட்டத்திலும் அந்நாட்டு அரசு இருந்தது.

லண்டனில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியிருப்பதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு ஏற்கனவே 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

இந்த நிலையில் தற்போது பனாமா கேட் ஊழல் வழக்கில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. நவாஸ் ஷெரீப்புக்கு 17 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் கணக்கில் வராத சொத்துக்களை எல்லாம் முடக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இதனால் நவாஸ் ஷெரீப் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி போராட்டம் செய்ய முயன்று வருகிறார்கள். இதனால் தற்போது பாகிஸ்தானில் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

English summary
Former Pakistan PM Nawaz Sharif sentenced to 7 years in jail in NAB reference case, acquitted in flagship reference case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X