For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்களுங்கு தொப்பை இருக்கா? நீங்க பணக்காராம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வருமானத்துக்கும் உடல் பருமனுக்கும் தொடர்பு உள்ளதாம். பணக்காரத் தன்மை கொண்டவர்களின் வயிறும் பெரிதாகிவிடுகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது

உலகில் மூன்றில் ஒரு பங்கினர் இப்போது உடல் பருமனாக உள்ளனர். 2 பில்லியன் மக்கள் உடல் எடையால் அவதிப்பட்டு வரும் நிலையில் 925 மில்லியன் மக்கள் கடும் பசியினால் அவதிப்பட்டு வருகின்றனர்.

உலகில் எந்த ஒரு நாடும் கடந்த மூன்று தலைமுறைகளாக உடல் பருமனைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை என்று உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

188 நாட்டு மக்கள்

188 நாட்டு மக்கள்

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் உடல் நல அளவு மற்றும் மதிப்பிடுதல் துறையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் முரே, 1980ல் இருந்து 2013 வரை தனது சகாக்களுடன் 188 நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் 1700 சோதனை முடிவுகளுடன் ஆய்ந்து இந்த முடிவை அறிவித்துள்ளார்.

உடல் எடையால் அவதி

உடல் எடையால் அவதி

உலகில் தற்போது 2 பில்லியன் மக்கள் அதிக எடை அல்லது உடல் பருமனால் அவதிப்படுகின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆப்பிரிக்க பெண்கள்

ஆப்பிரிக்க பெண்கள்

இதில் அதிக அளவு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ளதாகவும், அங்கு 60 முதல் 65 சதவீத பெண்கள் அதிக உடல் எடையால் சிரமப்படுகின்றனர் என்றும் ஆய்வு கூறுகிறது.

இந்தியா, சீனாவில் 15%

இந்தியா, சீனாவில் 15%

இந்தியாவும், சீனாவும் சேர்ந்து இந்த வகையில் 15% அளவுக்கு உடல்பருமன் உள்ளவர்களைக் கொண்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் 13%

அமெரிக்காவில் 13%

உலகில் உடல் பருமன் அதிகமுள்ள மக்கள் தொகையில், அமெரிக்காவில் 13 சதவீதத்தினர் உள்ளதாகவும், அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவாலான பணி

சவாலான பணி

உடல் பருமன் என்ற தீவிர நிலையைத் தடுக்க எந்த நாட்டாலும் இயலவில்லை என்றும், இது மிகவும் சவாலான பணி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பணத்திற்கும் எடைக்கும்

பணத்திற்கும் எடைக்கும்

முரே தரும் தகவலின்படி, வருமானத்துக்கும் உடல் பருமனுக்கும் தொடர்பு உள்ளதாம். பணக்காரத் தன்மை கொண்டவர்களின் வயிறும் பெரிதாகிவிடுகிறதாம்.

நோய் பாதிப்பு

நோய் பாதிப்பு

உடல் எடை அதிகம் இருந்தால், அதனுடன் நீரிழிவும், புற்றுநோயும் (குறிப்பாக கணையப் புற்று) கைகோர்ப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது இப்போது அதிகரித்து வருவதாக எச்சரிக்கிறார் முரே.

ஆய்வு முடிவுகள்

ஆய்வு முடிவுகள்

இந்தப் புதிய ஆய்வறிக்கை பில் & மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் உதவியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆய்வு முடிவுகள் வியாழக்கிழமை இன்று லான்செட் ஜர்னலின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

English summary
There are nearly a billion obese and overweight people in the developing world, according to a new report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X