For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க!

ஹவுடி மோடி விழாவில் அமெரிக்க நாடாளுமன்ற மெஜாரிட்டி தலைவர் ஸ்டெனி ஹோயர் மறைந்த பிரதமர் நேரு குறித்து பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

டெக்ஸாஸ்: ஹவுடி மோடி விழாவில் அமெரிக்க நாடாளுமன்ற மெஜாரிட்டி தலைவர் ஸ்டெனி ஹோயர் மறைந்த பிரதமர் நேரு குறித்து பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரத்தில் ஹவுடி மோடி விழா நடந்து வருகிறது.அமெரிக்காவில் உள்ள 50000 இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி இந்த விழாவில் பேசி வருகிறார்.

இந்த விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார். இதில் அமெரிக்காவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இந்தியர்கள் முன்னிலையில் பேசினார்கள்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

அமெரிக்க நாடாளுமன்ற மெஜாரிட்டி தலைவர் ஸ்டெனி ஹோயர் தனது பேச்சில், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா புதிய உயரத்தை அடைந்து வருகிறது. இந்தியா விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்தியாவில் பலர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஆசியாவில் மிக முக்கியமான நாடாக இந்தியா மாறி வருகிறது.

இந்தியா எப்படி

இந்தியா எப்படி

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புறவை வளர்த்து கொள்வது தான் இந்தியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கு ஒரே நோக்கம். அமெரிக்காவில் இந்தியர்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அமெரிக்காவை போலவே இந்தியாவும் தங்களது பாரம்பரியத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

காந்தியின் கொள்கை மற்றும் அறிவுரைபடி இந்தியா தனது எதிர்காலத்தை அமைக்க வேண்டும். நேருவின் மதச்சாற்பற்றத்தன்மையை பின்பற்றி இந்தியா தனது பன்முகத்தன்மையை மதிக்க வேண்டும். இந்தியாவில் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களின் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், என்று மெஜாரிட்டி தலைவர் ஸ்டெனி ஹோயர் குறிப்பிட்டுள்ளார்.

வைரல் ஆகியுள்ளது

இதை கேட்டதும் பிரதமர் மோடி திடீர் என்று அதிர்ச்சி அடைந்தார். இதற்கு எப்படி பதில் அளிப்பது என்று தெரியாமல் மோடி முகத்தை வித்தியாசமாக வைத்துக் கொண்டார். அவரின் ரியாக்சன் புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

English summary
Nehru, Gandhi, Secularism: This is wouldn't be, What PM Modi really planned for Howdy Modi meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X