For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று மண்டேலாவின் 96வது பிறந்தநாள்... டூடுள் போட்டு கூகுள் கவுரவம்!

Google Oneindia Tamil News

கேப் டவுண்: கறுப்பின விடுதலை தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையில் கழித்த தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு இன்று 96 வது பிறந்த நாள். மண்டேலாவின் பிறந்த நாளை சிறப்பிக்கு வகையில் கூகுல் தனது முகப்பு பக்கத்தில் அவரது ஓவியத்தை வைத்து அலங்கரித்துள்ளது.

கடந்த 1918-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ம்தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவர் ஆவார்.

இனவெறிக்கு எதிராக போராடி தன் வாழ்நாளில் சுமார் 27 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார் மண்டேலா. உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த மண்டேலா கடந்தாண்டு டிசம்பர் மாதம் காலமானார்.

இந்நிலையில் இன்று மண்டேலாவின் 96வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.

முதல் தலைமுறை...

முதல் தலைமுறை...

மண்டேலாவின் குடும்பத்திலிருந்து முதன் முதலில் பள்ளி சென்று கல்வி கற்றவர் நெல்சன் மண்டேலா தான்.

போர் கலைகள்...

போர் கலைகள்...

தனது இளவயதில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்த மண்டேலா, போர் கலைகளையும் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டக்கல்வி...

சட்டக்கல்வி...

1941-ஆம் ஆண்டு ஜோகானஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.

27 ஆண்டுகள் சிறை...

27 ஆண்டுகள் சிறை...

மக்கள் இனவெறியால் படும் துன்பங்களைக் கண்டு அதற்கு எதிராகக் குரல் கொடுத்தார். இதனால், கைது செய்யப்பட்ட மண்டேலா, 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். பின்னர் விடுதலை செய்யப்பட்ட மண்டேலா தொடர்ந்து மக்கள் பணி ஆற்றினார்.

முதல் கறுப்பின அதிபர்...

முதல் கறுப்பின அதிபர்...

அதனைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பினத்தைச் சேர்ந்த அதிபர் என்ற சிறப்போடு, கடந்த 1994ம் ஆண்டு மே 10-ந்தேதி அதிபராக பதவியேற்றார். 1999ம் ஆண்டு பதவி விலகிய மண்டேலா, மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட மறுத்து விட்டார்.

மரணம்...

மரணம்...

வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த மண்டேலா கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ம்தேதி அன்று தனது 95-வது வயதில் காலமானார்.

கூகுள் டூடுள்...

கூகுள் டூடுள்...

இந்நிலையில், இன்று மண்டேலாவின் 96வது பிறந்த நாள் கொண்டாடப்படுவதையொட்டி, கூகுள் தனது முகப்பு பக்கத்தை நெல்சன் மண்டேலாவின் உருவ ஓவியத்தை கொண்டு அலங்கரித்துள்ளது.

English summary
To speak of Nelson Mandela in mortal terms is trying to eclipse the shadow of a person who showed that it was easier to rebuild a nation using love and peace rather than hate and war. Honouring the same spirit of the late South African president, Google on Friday released its latest doodle celebrating the 96th birth anniversary of the charismatic leader.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X