For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்சன் மண்டேலா இளைய மகள் ஜிண்ட்ஸி திடீர் மரணம்.. சோகத்தில் தென் ஆப்பிரிக்கா

Google Oneindia Tamil News

டர்பன்: தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் நெல்சன் மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்ஸி மண்டேலா நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 59.

இந்த தகவலை அந்த நாட்டு உள்ளூர் ஊடகங்கள் இன்று வெளியிட்டுள்ளன. தற்போது ஜிண்ட்ஸி டென்மார்க்கில் தூதராக பதவியில் இருந்தார்.

Nelson Mandelas Daughter Dies At 59 In South Africa: Reports

ஜிண்ட்ஸி மண்டேலா திங்கள்கிழமை அதிகாலை ஜோகன்னஸ்பர்க் மருத்துவமனையில் இறந்ததாக அந்த நாட்டு தொலைக்காட்சியான, தென்னாப்பிரிக்க ஒலிபரப்புக் கழகம் தெரிவித்துள்ளது.

2015 முதல் டென்மார்க்கிற்கான தென்னாப்பிரிக்காவின் தூதராக இருந்தார் ஜிண்ட்ஸி மண்டேலா.

1985 ஆம் ஆண்டு முதல் மண்டேலாவின் மகள் சர்வதேச முக்கியத்துவம் பெற்றார். ஏனெனில் அப்போதுதான், வெள்ளை சிறுபான்மை அரசாங்கம் நெல்சன் மண்டேலாவை சிறையில் இருந்து விடுவிக்க முன்வந்தது. ​​ஆனால் போராட்டத்தை கைவிட கேட்டுக் கொண்டது. எனவே மண்டேலா விடுதலையாக சம்மதம் தெரிவிக்கவில்லை. தனது தந்தையின் இந்த முடிவை ஊடகங்களுக்கு வாசித்துக் காட்டியவர் ஜிண்ட்ஸி.

ஒரு சின்ன தண்ணீர் தொட்டி.. ஊரே திரண்டு வந்து பார்க்க.. ஒரே நாளில் செம வைரல்.. சேலத்தில் சுவாரசியம்!ஒரு சின்ன தண்ணீர் தொட்டி.. ஊரே திரண்டு வந்து பார்க்க.. ஒரே நாளில் செம வைரல்.. சேலத்தில் சுவாரசியம்!

ஜிண்ட்ஸி, மரணத்திற்கான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை. 2013ம் ஆண்டு, டிசம்பர் 5ம் தேதி, நெல்சன் மண்டேலா காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Zindzi Mandela, the youngest daughter of South Africa's first black president Nelson Mandela has died aged 59, local media reported Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X