For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேபாளத்தில் அரசியல் நெருக்கடி- ஆளும் கட்சிக்குள் அதிகார மோதல்- நாடாளுமன்றம் அதிரடியாக கலைப்பு!!

Google Oneindia Tamil News

காத்மாண்டு: நேபாளத்தில் ஆளும் கட்சிக்குள் அதிகார மோதல் உச்சகட்டத்தை அடைந்த நிலையில் அந்த நாட்டு நாடாளுமன்றம் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Nepal Political Crisis Explained In Tamil | Oneindia Tamil

    நேபாள பிரதமர் ஷர்மா ஒலி அண்மையில் அந்த நாட்டு அரசியல் சாசனம் தொடர்பான அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தார். இது மிகப் பெரிய சர்ச்சையானது. ஆளும் இடதுசாரி கட்சிக்குள்ளும் இந்த அவசர சட்டம் தொடர்பாக ஷர்மா ஒலிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    Nepal cabinet dissolves Parliament

    இந்த நிலையில் காத்மாண்டுவில் இன்று பிரதமர் ஷர்மா ஒலி தலைமையில் கூடிய அமைச்சரவை, நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்க அந்த நாட்டு ஜனாதிபதி வித்யா தேவி பண்டாரிக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் நேபாள நாடாளுமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது.

    அதிமுகவுக்கு எதிரான திமுகவின் சைபர் அட்டாக்... 'குற்றப்பத்திரிகை'யுடன் www.werejectadmk.comஅதிமுகவுக்கு எதிரான திமுகவின் சைபர் அட்டாக்... 'குற்றப்பத்திரிகை'யுடன் www.werejectadmk.com

    மேலும் நேபாள நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் 30 முதல் மே 10-ந் தேதிக்கு தேர்தல் நடைபெறும் என்றும் ஜனாதிபதி மாளிகையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும் மாவோயிஸ்ட் கட்சியும் இணைந்த நிலையில் 2018-ல் ஆளும் இடதுசாரி கட்சியின் பிரதமரானார் ஷர்மா ஒலி. இதன் துணைத் தலைவராக மாவோயிஸ்ட் கட்சி தலைவர் பிரசண்டா இருந்து வருகிறார்.

    அண்மையில் இந்தியாவுக்கு எதிராக பல முடிவுகளை ஷர்மா ஒலி எழுப்பியிருந்தார். அப்போது பிரசண்டா உள்ளிட்டவர்கள் ஷர்மா ஒலிக்கு கடும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். இதனால் ஆளும் கட்சிக்குள்ளேயே ஷர்மா ஒலிக்கு கடு நெருக்கடி உருவானது. இந்த நிலையில்தான் நேபாள நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளது.

    English summary
    Nepal President Bidya Devi Bhandari ratifies the proposal of the Cabinet to dissolve the Parliament: President's Office.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X