For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிடுகிடுவென ஆடிய பூமி... மளமளவென சரிந்த மலை... திக் திக் பூகம்ப வீடியோ!

Google Oneindia Tamil News

காத்மாண்டு: நேபாள நிலநடுக்கத்தில் மலைச்சிகரம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்படும் காட்சிகள் வீடியோ ஒன்றில் பதிவாகியுள்ளது.

கடந்த மாதம் நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பாதிப்பிலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்னதாகவே நேற்று முன்தினம் மீண்டும் அங்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது.

Nepal landslide captured on camera

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 70ஐ தாண்டியுள்ளது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், நிலநடுக்கத்தின் போது நிலச்சரிவு ஏற்படும் காட்சிகளை வீடியோவாக எடுத்துள்ளார் ஜேம்ஸ் ஷா என்பவர். கனடியன் ரெட் கிராஸில் இணைந்து சேவையாற்றி வரும் ஜேம்ஸ், நிலநடுக்கம் ஏற்பட்ட போது மலையடிவாரத்தில் இருந்த மருத்துவமனையில் பணியில் இருந்தார்.

எனவே, நிலநடுக்கம் ஏற்பட்டதும் மருத்துவமனையை விட்டு வெளியே வந்த ஜேம்ஸ், நிலச்சரிவு ஏற்படும் காட்சிகளை அப்படியே வீடியோவாக பதிவு செய்தார். தற்போது இந்தக் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. இதில் அந்த மலையில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவு தத்ரூபமாக படமாகியுள்ளது.

English summary
A video showing landslide after the massive 7.4 magnitude in Nepal was captured by a Canadian Red Cross worker on Wednesday.The video is said to be shot by James Shaw of the Red Cross who was at a field hospital at the base near a hill setup to provide medical assistance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X