For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாய தயாராகும் டிராகன்.. எல்லையை ஆக்கிரமிக்க ஜிங்பிங் பகீர் திட்டம்.. சீனாவை நம்பி ஏமாந்த நேபாளம்!

Google Oneindia Tamil News

காத்மண்டு: நேபாளம் - சீனா - இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் எல்லையில் இருக்கும் நேபாளுக்கு சொந்தமான இடங்களை சீனா ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது. இதற்கான ஆதாரங்கள் கூட வெளியகி உள்ளது.

Recommended Video

    India China Border பிரச்சினை இருந்தா இருக்கட்டும்...Russia அதிபர் Putin-ன் அதிரடி Plan

    சீனாவிற்கு மிகவும் நெருக்கமான நாடாக தற்போது நேபாளம் மாறி இருக்கிறது. சீனாவின் பேச்சை கேட்டு இந்தியாவிற்கு எதிராக நேபாளம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் இருக்கும் லிபுலேக் உள்ளிட்ட இடங்களை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது.

    அதோடு நேபாளம் இந்தியாவிற்கு எதிராக மேப் ஒன்றை கூட வெளியிட்டது. இந்த நிலையில்தான் இந்தியாவிற்கு எதிராக அந்த நாடு குடியுரிமை சட்டம் கூட கொண்டு வர உள்ளது.

    மூச்சு கூட விடமுடியவில்லை.. அசர வைத்த இந்திய வீரர்களின் திறமை.. சீனாவை கலங்கடித்த 5 நிமிட வீடியோ! மூச்சு கூட விடமுடியவில்லை.. அசர வைத்த இந்திய வீரர்களின் திறமை.. சீனாவை கலங்கடித்த 5 நிமிட வீடியோ!

    சீனாவின் திட்டம்

    சீனாவின் திட்டம்

    சீனாவின் பேச்சை கேட்டுதான் தொடர்ந்து நட்பு நாடாக இருந் நேபாளம் இந்தியாவை எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் தற்போது நேபாளம் - சீனா - இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் எல்லையில் இருக்கும் நேபாளுக்கு சொந்தமான இடங்களை சீனா ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது. இதற்கான ஆதாரங்கள் கூட வெளியாகி உள்ளது. நேபாளத்தை முதுகில் குத்தும் விதமாக நேபாளத்தை சீனா ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது.

    என்ன செய்தது

    என்ன செய்தது

    நேபாளம் அரசு வெளியிட்டுள்ள புதிய சர்வே ஆதாரங்களின் படி, அதன்படி நேபாளம் - சீனா எல்லையில் இருக்கும் மொத்தம் 11 பகுதிகளை சீனா ஆக்கிரமித்து உள்ளது. இதில் 10 இடங்களை சீனா மொத்தமாக நேபாளத்திடம் இருந்து அபகரித்து உள்ளது. ஒரு இடத்தை பாதி ஆக்கிரமித்து உள்ளது. மொத்தம் 33 ஏக்கர் நிலத்தை இதுவரை கடந்த சில வாரங்களில் சீனா ஆக்கிரமித்து உள்ளது .

    மிக மோசம்

    மிக மோசம்

    அதோடு, நேபாளத்திற்கு செல்லும் நதியை திசை திருப்பி வருகிறது. அதன்படி நதிகளை திசை திருப்பி, அதிக நிலப்பரப்பை ஏற்படுத்தி அதன் மூலம் அந்த நில பகுதிகளை சீனா ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது. ஹுமலா என்ற நேபாள மாவட்டத்தை சீனா 90% ஆக்கிரமித்துவிட்டது என்கிறார்கள். இப்படி ஆக்கிரமித்த இடங்களில் எல்லாம் சீனா தனது படைகளை குவித்து, அங்கு கட்டுமான பணிகளை செய்து வருகிறது.

    வேறு எங்கு

    வேறு எங்கு

    அதேபோல் நேபாளத்தின் ரஸுவா மாவட்டத்திலும் சீனா தீவிரமாக ஆக்கிரமிப்புகளை செய்து வருகிறது. திபெத் போலவே நேபாளத்தை தங்கள் நாட்டிற்கு கீழே கொண்டு வருவதுதான் சீனாவின் பல கால நோக்கம் ஆகும். அதன் ஒரு பகுதியாகத்தான் நேபாளம் மீது சீனா இப்படி ஆக்கிரமிப்புகளை செய்து வருகிறது. லடாக், சிக்கிம், அருணாசலப்பிரதேசம், நேபாளம் ஆகிய பகுதிகளை மொத்தமாக சீனா தங்கள் நாட்டுடன் இணைக்க திட்டமிட்டு வருகிறது.

    ஏமாறும் நேபாளம்

    ஏமாறும் நேபாளம்

    சீனாவின் நம்பியதால் தற்போது சொந்த நிலத்தையே நேபாளம் இழக்க தொடங்கி உள்ளது. நேபாளம் இந்தியாவுடன் ஒற்றுமையாக இருந்திருந்தால் குறைந்தது அந்த நாட்டிற்கு நலத்திட்டங்களாவது கிடைத்து இருக்கும். ஆனால் சீனாவுடன் சேர்ந்து தற்போது சொந்த நிலத்தை இழந்ததோடு வரும் காலத்தில் சுதந்திரத்தையும் இழக்கும் நிலைக்கு நேபாளம் சென்று கொண்டு இருக்கிறது.

    English summary
    Nepal losing its land to China incursion in the border areas.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X