For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேறவழியே இல்லை- நேபாள பிரதமர் ஷர்மா ஒலி இன்று பதவியை ராஜினாமா செய்கிறார்?

Google Oneindia Tamil News

காத்மண்டு: ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி இன்று தமது பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றும் போது தமது ராஜினாமா அறிவிப்பை ஷர்மா ஒலி வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது.

நேபாள பிரதமர் ஷர்மா ஒலி சீனாவுடன் நெருக்கம் காட்டிக் கொண்டு இந்தியாவுடன் மல்லுக்கட்டி வருகிறார். இந்திய நிலப்பகுதிகளை நேபாள வரைபடத்தில் இணைத்து புதிய சர்ச்சைகளை உருவாக்கினார்.

Nepal PM KP Sharma Oli likely to address the nation today

இதனால் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனிடையே ஷர்மா ஒலிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பின்னர் அவர் வீடு திரும்பிவிட்டதாகவும் கூறப்பட்டது.

இதன் உச்சகட்டமாக தமது தலைமையிலான நேபாள அரசை கவிழ்க்க இந்தியா சதி செய்கிறது என்று பகிரங்கமாகவே ஷர்மா ஒலி குற்றம்சாட்டினார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் ஷர்மா ஒலிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் ஷர்மா ஒலி பதவிய ராஜினாமா செய்தாக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனிடையே ஷர்மா ஒலிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பின்னர் அவர் வீடு திரும்பிவிட்டதாகவும் கூறப்பட்டது.

Recommended Video

    இந்தியாவை பகைத்துக் கொண்ட நேபாள பிரதமருக்கு நெருக்கடி!

    இந்நிலையில் நேபாள மக்களுக்கு இன்று ஷர்மா ஒலி உரையாற்ற உள்ளார். அப்போது தமது பதவியை ராஜினாமா செய்வது தொடர்பான அறிவிப்பை ஷர்மா ஒலி வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய ஆதரவாளர் பிரசண்டா புதிய பிரதமராகக் கூடும் எனவும் நேபாள தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    Nepal Prime Minister KP Sharma Oli likely to address the nation today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X