For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேபாள நிலநடுக்கம்: 22 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட 4 மாத சிசு குடும்பத்துடன் சேர்ப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காத்மண்டு: நேபாள நிலநடுக்கத்தில் கட்டிட இடுபாடுகளில் சிக்கி,பல மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட 4 மாத குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான பக்தபூர் பகுதியில் சில வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, குழந்தையின் அழுகுரல் வீரர்களுக்கு கேட்டது. இதையடுத்து, அந்த பகுதியில் வீரர்கள் மீட்புப் பணியை துரிதப்படுத்தினர். அப்போது, இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்த குழந்தை ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

Nepal quake: 4-month-old baby rescued, reunited with family

பிறந்து 4 மாதமே ஆன அந்த குழந்தைதையை மண்ணுக்குள் இருந்து வெளியே எடுத்தபோது அது வீறிட்டு அழுதது. வீரர்கள் அந்த குழந்தையை சமாதானப்படுத்தி உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அந்த குழந்தையின் பெற்றோரைத் தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டு முகாம் ஒன்றில் தங்கியிருந்த குழந்தையின் பெற்றோரை மீட்புப்படையினர் கண்டுபிடித்தனர். அந்த குழந்தையின் பெற்றோர் ஷ்யாம் அவால் - ரேஸ்மிலா தம்பதியினர் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் குழந்தையை ஒப்படைக்கப்பட்டது.

Nepal quake: 4-month-old baby rescued, reunited with family

தங்கள் குழந்தை உயிரோடு இருக்காது என்று எண்ணி அழுது புலம்பிக் கொண்டிருந்த ஷ்யாம்-ரேஸ்மிலா தம்பதிகளுக்கு தங்கள் 4 மாத குழந்தை உயிரோடு கொண்டு வரப்பட்டதை பார்த்து எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர். அவர்கள் கண்ணீர் மல்க குழந்தையை மீட்புப்படையினரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். தாயை கண்ட குழந்தை சிரிப்புடன் அவரிடம் தாவிக் கொண்டது.

Nepal quake: 4-month-old baby rescued, reunited with family

குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது குறித்து பெற்றோர் கூறுகையில், எங்கள் குழந்தை மீண்டும் கிடைத்து விட்டான். இந்த உலகிலேயே நாங்கள்தான் மகிழ்ச்சியான தம்பதிகள். ஆனால் என்னால் இதனை இப்பவும் நம்ப முடியவில்லை என்றனர்.

English summary
The parents did not give up hope and were very happy when after 22 hours of being trapped in the rubble of the building that had collapsed during the earthquake, their baby boy was rescued.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X