For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் சீண்டிய நேபாளம்.. பீகார் எல்லையில் திடீர் துப்பாக்கி சூடு.. இந்தியர் படுகாயம்.. பரபரப்பு!

Google Oneindia Tamil News

காத்மாண்டு: இந்தியாவில் இருக்கும் நிலப்பரப்பை உரிமை கொண்டாடி வரும் நேபாளம் தற்போது பீகார் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறது.

இந்தியாவில் இருக்கும் மூன்று பகுதிகளை நேபாளம் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்தியா நேபாளம் இடையே நடக்கும் இந்த பிரச்சனைக்கு காரணம் லிபு லேக் பகுதிதான்.

அங்கு இந்தியா சாலை அமைத்து சில கட்டுமான பணிகளை மேற்கொண்டது. ஆனால் இந்த சாலைக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இங்குதான் பிரச்சனை தொடங்கியது.

இன்னும் 2 வாரம்.. கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்?.. ரஷ்யா திட்டம்!இன்னும் 2 வாரம்.. கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்?.. ரஷ்யா திட்டம்!

மூன்று இடங்கள்

மூன்று இடங்கள்

எல்லையில் லிபு லேக், லம்பியாதூரா, கல்பாணி ஆகிய பகுதிகள் நேபாளுக்கு சொந்தமானது. இங்கு இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்று நேபாளம் பிரதமர் கேபி சர்மா ஒளி தெரிவித்து வருகிறார். இந்த இடங்களை நாங்கள் மீட்டு எடுப்போம் என்று நேபாளம் கூறியது. அதோடு இது தொடர்பாக நேபாளம் மேப் ஒன்றை வெளியிட்டது. இது தொடர்பாக அங்கு சட்ட திருத்தமும் செய்யப்பட்டு இருக்கிறது.

துப்பாக்கி சூடு

துப்பாக்கி சூடு

இந்த நிலையில் நேபாள போலீஸ் தற்போது பீகார் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறது. நேபாள போலீசார் கிஷாந்த்கஞ்ச் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. எல்லைக்கு அருகே சென்று கொண்டு இருந்த மூன்று இந்தியர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். காயம் அடைந்த அந்த நபர் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

எதனால் இந்த துப்பாக்கி சூடு நடந்தது என்று முழு விபரம் தெரியவில்லை. இந்தியா நேபாளம் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது.முன்னதாக கடந்த மாதம் பீகார் அருகே இந்தியர் ஒருவர் நேபாளம் போலீஸ் மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. பீகார் அருகே சீதமார்கி பகுதியில் இந்த துப்பாக்கி சூடு நடந்து இருக்கிறது. இதில் இந்தியர்கள் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

மீண்டும்

மீண்டும்

தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நேபாளம் அருகே அந்நாட்டு போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது . இதை இந்தியா விரைவில் தட்டி கேட்கும் என்று கூறுகிறார்கள். முன்னதாக நேபாளம் பிரதமர் சர்மா ஒலி, ராமர் எங்களுக்கு சொந்தமானவர். அவர் நேபாளத்தில் பிறந்தவர். உண்மையான அயோத்தி என்பது நேபாளத்தில்தான் இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Nepal shoots at people in Bihar Border once again: 1 Indian injured today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X