For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கு எதிராக மக்களை மூளைச் சலவை செய்யும் நேபாளம்.. வானொலியில் விஷம பிரச்சாரம்

Google Oneindia Tamil News

காத்மாண்டு: இந்தியாவிற்கு எதிரான பாடல்களை நேபாள ரேடியோ அதிகம் ஒலிபரப்பி வருவதாக கூறப்படுகிறது. இந்த பாடல்கள் உத்தரகாண்ட் மாநில எல்லைகளில் அதிகம் ஒலித்து வருகிறது.

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கலபாணி, லிபுலேக், லிம்பியாதுரா போன்ற பகுதிகள் தங்களுக்கு சொந்தம் என்றும் அதை இந்தியா ஆக்கிரமித்ததாகக் கூறி புதிய வரைபடத்தை நேபாளம் அண்மையில் வெளியிட்டது. இதற்கு நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

உத்தரகண்டில் உள்ள கலபாணி, லிபுலேக், லிம்பியாதுரா போன்ற பகுதிகளை த்ங்களுக்கு இந்தியா திருப்பித் தர வேண்டும் என்று கேட்டு வருகிறது.

முதல் முறை.. இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் நேபாள ராணுவம்.. ராணுவ தளபதியும் வருகை முதல் முறை.. இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் நேபாள ராணுவம்.. ராணுவ தளபதியும் வருகை

 எல்லை ஆக்கிரமிப்பு

எல்லை ஆக்கிரமிப்பு

இதற்கிடையே நேபாளத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் சுமூகமாக இல்லை. ஒருபக்கம் பிரதமர் ஒலி, சீனாவுடன் சேர்ந்துகொண்டு இந்தியாவை நேரடியாக விமர்சித்து இந்தியாவிற்கு எதிராக மாறி உள்ளார் . இன்னொரு பக்கம் அந்நாட்டு மக்களிடம் எல்லையை ஆக்கிரமித்துவிட்டதாக கூறி இந்தியாவிற்கு எதிராக மனநிலையை உருவாக்குவதில் அரசியல்வாதிகள் ஈடுபட்டுவருகிறார்கள்.

 எதிர்ப்பு பாடல்கள்

எதிர்ப்பு பாடல்கள்

இந்நிலையில் உத்தரகாண்ட் எல்லை கிராமங்களில் நேபாளம் வானொலியை வைத்து சத்தமில்லாமல் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. இந்த கிராமங்களில் கடந்த சில மாதங்களாக நேபாள ரேடியாக்களில் வரும் இந்திய எதிர்ப்பு பாடல்கள் அதிகம் கேட்கின்றன.

 கேலி செய்யும் பாடல்

கேலி செய்யும் பாடல்

செய்தி மற்றும் பாடல் நிகழ்ச்சிகளுக்கு இடையில் இந்தியாவிற்கு எதிரான பாடல்கள் பல முறை இசைக்கப்படுகின்றன. இந்தியாவுக்கு எதிரான உணர்வோடு, இந்த பாடல்கள் நேபாள அரசியல்வாதிகளையும் நேபாளத்திற்கு "சொந்தமான" நிலத்தை கட்டுப்படுத்த "போதுமானதை செய்யவில்லை" என்றும் கேலி செய்கின்றன.

 நேபாள அரசு

நேபாள அரசு

இந்த முயற்சிகளை நேபாள ரேடியோ தீவிரமாக செய்து வருகிறது. இன்னொரு பக்கம் நேபாள அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த சட்டம் இந்தியாவுக்கு எதிராக இருக்கும் என்று பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் நேபாள ஊடகங்களோ குடியுரிமை திருத்த சட்டம் பொதுவாகவே இருக்கும் என்றும் இந்தியாவுக்கு எதிராக இருக்கும் என்பது பொய்யான தகவல் என்றும் சொல்கின்றன.

 வெளிநாட்டினர் திருமணம்

வெளிநாட்டினர் திருமணம்

தற்போதைய நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பெண்கள் நேபாளிகளை திருமணம்செய்து கொண்டால் அவர்கள் தற்போது உடனடியாக குடியுரிமை வழங்கப்படும். அதாவது திருமண சான்றிதழ் இருந்தால் உடனே நேபாளிகளை திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு பெண்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். ஆனால் இனி வரும் நாட்களில் அதை மாற்ற முடிவு செய்துள்ளனர். அதன்படி நேபாளிகளை திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு பெண்கள் உடனடியாக அங்கு குடியுரிமை பெற முடியாது. அவர்கள் மொத்தம் 7 வருடம் காத்திருக்க வேண்டும். 7 வருடம் கழித்துதான் நேபாளிகள் திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு பெண்களுக்கு குடியுரிமை கிடைக்கும் என்று மாற்றப்பட்டுள்ளது.

 சீனா நேபாளம்

சீனா நேபாளம்

இந்தியாவிற்கு எதிராக சீனா, நேபாள நாடுகள் இப்போது திரும்பிஇருப்பதற்கு காரணம், இந்தியா இந்த இரு நாட்டு எல்லைப்பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளை விரைவு படுத்தி வருகிறது. அத்துடன் பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்து வருகிறது. இதை இரு நாடுகளுமே விரும்பவில்லை. ஏற்கனவே பாகிஸ்தான் காஷ்மீர் விஷயத்தில் ஒரு பக்கம் சண்டை போட்டு வரும் நிலையில் சீனா லடாக்கிலும், நேபாளம் உத்தரகாண்டிலும் சண்டை போடுகின்றன.

English summary
Nepal has started radio campaign in bordering villages of Uttarakhand. The residents of these villages can catch Nepali Radio stations that are now playing anti-India songs from the last few months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X