For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்

Google Oneindia Tamil News

காத்மாண்டு: மகாத்மா காந்தியைத் தவிர கௌதம் புத்தர் "இரண்டு சிறந்த இந்தியர்களில்" ஒருவர் என்று வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டதற்கு நேபாளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமைச்சரின். இந்த கருத்துக்கு நேபாள வெளியுறவு அமைச்சகம் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

Recommended Video

    Ramar நேபாளி என்றால் Buddhar இந்தியனா இருக்க கூடாதா? | Oneindia Tamil

    "கௌத புத்தர் நேபாளத்தின் லும்பினியில் பிறந்தார் என்பதற்கான வரலாற்று உண்மை மற்றும் மறுக்க முடியாத ஆதாரங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அறிக்கையில் கூறியிள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி 2014ம் ஆண்டு நோபாளம் வந்த போது "உலகில் அமைதியை போதித்த புத்தர் பிறந்த நாடு நேபாளம்" என்று கூறியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராமர் நேபாளத்தின் அயோத்தியாபுரியில் பிறந்தார்- உ.பி.அயோத்தியில் கிடையாது- நேபாள பிரதமர் ஒலி 'அடம்'ராமர் நேபாளத்தின் அயோத்தியாபுரியில் பிறந்தார்- உ.பி.அயோத்தியில் கிடையாது- நேபாள பிரதமர் ஒலி 'அடம்'

    நேபாளத்தில் பிறந்தவர்

    நேபாளத்தில் பிறந்தவர்

    நேபாளத்தின் ஆட்சேபனைக்கு பின்னர், வெளிவிவகார அமைச்சகம் பதிலளித்தது, "சிஐஐ நிகழ்வில் நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியது புத்தரின் பாரம்பரியத்தை குறிக்கிறது. கௌதம் புத்தர் நேபாளத்தில் உள்ள லும்பினியில் பிறந்தார் என்பதில் சந்தேகமில்லை." என்று கூறியுள்ளது.

    சிறந்த இந்தியர்

    சிறந்த இந்தியர்

    இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்த மெய்நிகர் உச்சிமாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் உரையாற்றும் போது மகாத்மா காந்தியைத் தவிர இரண்டு சிறந்த இந்தியர்களில் ஒருவராக கௌதம புத்தரை எண்ணுவதாக கூறினார்.

    நேபாளம் எதிர்ப்பு

    நேபாளம் எதிர்ப்பு

    ஜெய்சங்கரின் கூற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேபாளத்தின் முன்னாள் வெளியுறவு செயலாளர் மதுராமன் ஆச்சார்யா ஒரு ட்வீட்டில், "சுமார் 2270 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய பேரரசர் அசோக் புத்தரின் பிறப்பிடத்தை குறிக்கும் வகையில் நேபாளத்தின் லும்பினியில் ஒரு தூண் அமைக்கப்பட்டுள்ளது.. அந்த நினைவுச்சின்னம் புத்தர் ஒரு "இந்தியர்" என்று சொல்லப்படும் சுய-மோசமான கூற்றைவிட உயர்ந்தது என்று கூறியுள்ளார.

    நேபாளம் பதிலடி

    நேபாளம் பதிலடி

    இதேபோல் நேபாளத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் லீலா மணி தனது ட்விட்டரில் பதிலளித்தார், "கௌதம புத்தர் பிறப்பால் நேபாளி, லும்பினியில் பிறந்தவர், நேபாளம் மற்றும் புத்தாயிஷசம் ஆகியவை மனிதகுலத்தின் பொதுவான பாரம்பரியம்! உரிமைகோரல் மட்டுமே மிகப்பெரிய சிந்தனையாளரின் நிலையை மாற்றாது. கடந்த 3000 ஆண்டுகளில் வாழ்க்கை மற்றும் உலகின் ஆசிரியர் புத்தர் " என்று கூறியுள்ளார்.

    English summary
    The Nepalese Foreign Ministry took strong objection to the comment. strong objection to the comment to Jaishankar’s reference to Buddha as Indian. MEA issues clarification , "EAM's remarks yesterday at the CII event referred to our shared Buddhist heritage. There is no doubt that Gautam Buddha was born in Lumbini, which is in Nepal."
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X