For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எவ்வளவு திமிர்.. மீண்டும் சீண்டும் நேபாளம்.. புதிய மேப்பை இந்தியாவிற்கு அனுப்ப பிளான்.. பின்னணி!

Google Oneindia Tamil News

காத்மண்டு: நேபாளம் புதிதாக உருவாக்கி இருக்கும் புதிய மேப்பை இந்தியாவிற்கு அனுப்ப உள்ளது. இந்தியாவை சீண்டும் வகையில் நேபாளம் இந்த செயலை செய்கிறது.

Recommended Video

    புதிய வரைபடத்தை இந்தியாவுக்கு அனுப்ப Nepal திட்டம்

    இந்தியாவிற்கும் சீனாவிற்கும் மோதல் இருப்பது போலவே, இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் கடுமையான மோதல் நிலவி வருகிறது.இந்தியாவில் இருக்கும் மூன்று பகுதிகளை நேபாளம் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடி வருகிறது.

    இந்தியா நேபாளம் இடையே நடக்கும் இந்த பிரச்சனைக்கு காரணம் லிபு லேக் பகுதிதான்.அங்கு இந்தியா சாலை அமைத்து கட்டுமான பணிகளை மேற்கொண்டது. ஆனால் இந்த சாலைக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    நீண்ட காலம்.. அணிவகுக்க போகும் வீரர்கள்.. லடாக்கில் இந்தியா போடும் வின்டர் பிளான்.. சீனாவிற்கு கேட்!நீண்ட காலம்.. அணிவகுக்க போகும் வீரர்கள்.. லடாக்கில் இந்தியா போடும் வின்டர் பிளான்.. சீனாவிற்கு கேட்!

    சாலை

    சாலை

    இங்குதான் பிரச்சனை தொடங்கியது. இந்த சாலை பணிக்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து எல்லையில் லிபு லேக், லம்பியாதூரா, கல்பாணி ஆகிய பகுதிகள் நேபாளுக்கு சொந்தமானது. இங்கு இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்று நேபாளம் பிரதமர் கேபி சர்மா ஒளி தெரிவித்து வருகிறார். இந்த இடங்களை நாங்கள் மீட்டு எடுப்போம் என்று நேபாளம் கூறியது.

    வரைபடம் வெளியிட்டது

    வரைபடம் வெளியிட்டது

    அதோடு இது தொடர்பாக நேபாளம் மேப் ஒன்றை வெளியிட்டது. இது தொடர்பாக அங்கு சட்ட திருத்தமும் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வரைபடம் தற்போது அந்நாட்டு ஒப்புதலை பெற்றுள்ளது. இது இந்தியாவிற்கு கோபத்தை அளித்துள்ளது. இதனால் நேபாளம் உடன் இந்தியா தற்போது உறவை முறித்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறது.

    நேபாளம் எப்படி

    நேபாளம் எப்படி

    இந்த நிலையில், தற்போது நேபாளம் தனது புதிய மேப்பை இந்தியாவிற்கு அனுப்ப உள்ளது. தனது மாற்றப்பட்ட மேப்பை இந்தியாவிற்கு நேபாளம் அனுப்ப உள்ளது. இதுதான் இனி எங்கள் மேப். நாங்கள் இதைத்தான் பயன்படுத்த போகிறோம். உங்கள் மேப்பில் தேவையான மாற்றத்தை செய்து விடுங்கள் என்று இந்தியாவிற்கு நேபாளம் கோரிக்கை வைக்க உள்ளது.

    கூகுள் அனுப்பியது

    கூகுள் அனுப்பியது

    அதேபோல் கூகுளுக்கும் நேபாளம் இந்த புதிய மேப்பை அனுப்ப உள்ளது. கூகுள் மேப்பில் இந்த இடங்களை நேபாளத்திற்கு கீழ் வரும் இடங்களாக குறிக்க கூகுளுக்கு நேபாளம் கோரிக்கை வைத்துள்ளது. அதேபோல் ஐநா சபைக்கும் நேபாளம் இந்த புதிய வரைபடத்தை அனுப்ப உள்ளது. இந்த புதிய வரைபடத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி, ஐநாவிற்கு நேபாளம் இதை அனுப்ப உள்ளது.

    எத்தனை காப்பி

    எத்தனை காப்பி

    இதற்காக மொத்தம் 4000 காப்பி நேபாள வரைபடங்களை அந்த நாடு உருவாக்க உள்ளது. உலக நாடுகளுக்கு எல்லாம் அந்த நாடு இதை அனுப்ப உள்ளது. அதேபோல் தனது சொந்த நாட்டு மக்களுக்கும் இந்த வரைபடத்தை நேபாளம் அனுப்ப உள்ளது. இதற்காக 25 ஆயிரம் காப்பியை முதல் கட்டமாக நேபாளம் உருவாக்கி உள்ளது. இந்தியாவை சீண்டும் வகையில் நேபாளம் இப்படி செயல்படுகிறது.

    வாய்ப்பு இல்லை

    வாய்ப்பு இல்லை

    ஆனால் இதை ஐநா ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். அதாவது இந்த புதிய வரைபடத்தை ஐநா ஒப்புக்கொள்ளாது.இந்த பகுதியை பிரச்சனை நிலவும் பகுதி என்று ஐநா அறிவிக்க வாய்ப்புள்ளது. ஆனால் கண்டிப்பாக நேபாளத்தின் வரைபடத்தை ஐநா ஏற்றுக்கொள்ளாது என்று கூறுகிறார்கள்.

    English summary
    Nepal to send its revised map to India, The UN, and Google soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X