For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டது.. சீனாவை நம்பி இந்தியாவை சீண்டிய நேபாளம்.. பெரிய ஏமாற்றம்!

Google Oneindia Tamil News

காத்மண்டு: சீனாவை நம்பி இந்தியாவை கடுமையாக எதிர்த்த நேபாளம் தற்போது பெரிய சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பும் நிலைக்கு சீனா சென்றுள்ளது.

சீனாவுடன் ஒரு பக்கம் எல்லை பிரச்சனை இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் நேபாளம் எல்லையில் இந்தியாவுடன் மோதி வருகிறது. இந்தியாவில் இருக்கும் பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாட தொடங்கி உள்ளது.

எங்கள் நாட்டில் இருக்கும் பகுதிகளை இந்தியா அபகரித்துவிட்டது. நேபாளத்தை ஏமாற்றி இந்தியா எல்லையை மாற்றிவிட்டது என்று நேபாளம் தொடர்ந்து கடுமையான புகார்களை அளித்து வருகிறது.

அக்ரிமெண்ட் போட்டுவிட்டோம்.. லடாக் எல்லையில் நடக்கும் எதிர்பாராத மாற்றங்கள்.. மௌனம் கலைத்த சீனா! அக்ரிமெண்ட் போட்டுவிட்டோம்.. லடாக் எல்லையில் நடக்கும் எதிர்பாராத மாற்றங்கள்.. மௌனம் கலைத்த சீனா!

என்ன காரணம்

என்ன காரணம்

நேபாளம் எல்லையில் உள்ள லிபு லேக் பகுதிதான் இந்த இரண்டு நாட்டு சண்டைக்கு காரணம். இங்கு கடந்த மே 8ம் தேதி இந்தியா சாலை அமைத்தது.அதாவது உத்தரகாண்ட் மாநிலம் காத்தியபார்க் பகுதியில் இருந்து லிபு லேக் வரை 80 கிமீ பகுதிக்கு சாலை அமைத்தது. நேபாள் எல்லையில் இருந்து 5 கிமீ தூரம் வரை இந்த சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை காரணமாக தற்போது சண்டை வந்துள்ளது. லிபு லேக் பகுதியை நேபாளம் தனக்கு சொந்தமான பகுதி என்று கடந்த சில மாதங்களாக கூறி வருகிறது.

நேபாளம் நிலை

நேபாளம் நிலை

இது எங்களுக்கு சொந்தமான இடம். இந்தியா இதை ஆக்கிரமித்து இருக்கிறது. இந்த இடத்தை மீண்டும் மீட்டு எடுப்போம் என்று கூறி வருகிறது. இது தொடர்பாக நேபாளம் பிரதமர் பிரசாத் சர்மா புதிய மேப் ஒன்றை வெளியிடும் முயற்சியில் இருக்கிறார். இதற்காக அங்கு நாடாளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த சட்ட திருத்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்த வார இறுதியில் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.

சீனா இருக்கும் தைரியம்

சீனா இருக்கும் தைரியம்

சீனா இருக்கும் தைரியத்தில்தான் நேபாளம் இந்தியாவிற்கு எதிராக இப்படி செய்து கொண்டு இருக்கிறது என்று புகார் உள்ளது. அதாவது நேபாளத்தின் இந்த திடீர் திமிருக்கு பின் சீனாவின் திட்டங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். சீனா இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக நேபாளத்தை தூண்டி விடுகிறது என்கிறீர்கள். இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா சண்டை போடும் நிலையில் நேபாளம் மூலம் சீனா இந்தியாவை நெருக்கி வருகிறது என்கிறார்கள்.

சீனா செய்த வேலை

சீனா செய்த வேலை

நேபாளத்தின் இந்த புதிய தைரியத்திற்கு முழுக்க முழுக்க சீனாதான் காரணம். சீனாவை நம்பி இந்தியாவை கடுமையாக எதிர்த்த நேபாளம் தற்போது பெரிய சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பும் நிலைக்கு சீனா சென்றுள்ளது. ஏனென்றால் இந்தியா - சீனா மீண்டும் ஒற்றுமையாக தொடங்கி வருகிறது. கடந்த ஒரு மாதமாக லடாக் எல்லையில் இந்தியா - சீனா மோதி வந்தது.

திருப்பம் என்ன

திருப்பம் என்ன

ஆனால் தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தியா - சீனா இடையிலான மோதல் தீர்க்கப்பட்டு வருகிறது. லடாக் எல்லையில் சீனாவும் படைகளை வாபஸ் வாங்கி வருகிறது. இரண்டு நாட்டு ராணுவ ரீதியான பேச்சுவார்த்தை காரணமாக பதற்றம் தணிந்து வருகிறது. கல்வான் பகுதியில் சீனா தனது படைகளை பெரிய அளவில் வாபஸ் வாங்கி இருக்கிறது. இதனால் அங்கு அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேபாளம் ஏமாற்றம்

நேபாளம் ஏமாற்றம்

சீனாவும் இந்தியாவும் சண்டை போடும். அப்போது உள்ளே புகுந்து இடங்களை பிடுங்கி கொள்ளலாம் என்று நேபாளம் நம்பியது. சீனா - இந்தியா சண்டையின் நேபாளம் குளிர் காயலாம் என்று நினைத்தது. சீனாவை நம்பி மிக தீவிரமாக இந்தியாவை நேபாளம் எதிர்த்தது. ஆனால் புதிய திருப்பமாக தற்போது இந்தியா - சீனா நெருங்கி வருகிறது. இது நேபாளத்திற்கு பெரிய ஏமாற்றமாக மாறியுள்ளது. நேபாளம் தவறாக கால் வைத்துவிட்டது.

இனி என்ன செய்யும்

இனி என்ன செய்யும்

இந்தியாவும் - சீனாவும் அமைதியாக போக முடிவு செய்துள்ள நிலையில் இனி என்ன செய்வது என்று தெரியாமல் நேபாளம் குழம்பி வருகிறது. இந்தியா போன்ற பெரிய நாட்டை எதிர்ப்பது கண்டிப்பாக நேபாளம் போன்ற குட்டி தேசத்திற்கு சரியான முடிவாக இருக்காது. இதனால் வரும் நாட்களில் லிபு லேக் பிரச்சனையில் நேபாளம் பின்வாங்கும், அல்லது பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என்று கூறப்படுகிறது.

English summary
Nepal took wrong decisions against India trusting China's support.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X