For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜப்பானில் காபி மேக்கரை கூவிக்கூவி விற்கும் “சேல்ஸ்மேன்” ரோபோக்கள் அறிமுகம்!

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானில் நெஸ்லே நிறுவனத்தில் ரோபோக்கள் சேல்ஸ்மேன் பணியில் செயல்பட்டு வருவது காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

நவீன அறிவியல் உலகில் ரோபோக்களின் பங்கு மிக அவசியமானதாக திகழ்கிறது.

இந்நிலையில், சர்வதேச உணவு வர்த்தக நிறுவனமான நெஸ்லே "ரோபோ"க்களை சேல்ஸ்மேன் பணியில் அமர வைத்துள்ளது.

Nestle Japan hiring 1,000 robots to sell espresso machines

காபி மேக்கர் விற்கும் ரோபோ:

ஜப்பானில் தான் தயாரிக்கும் காபிமேக்கர் கருவிகளை விற்பனை செய்ய 1000 ரோபோக்களை உருவாக்கியுள்ளது.

"பெப்பர்" என்னும் பெயர்:

இது பிரான்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு தைவானில் தயாரிக்கப்பட்டது. பெப்பர் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் ஜப்பான் வர்த்தக நிறுவனங்களில் சேல்ஸ்மேன் ஆக வலம் வருகிறது.

20 ரோபோக்கள் உபயோகம்:

தற்போது 20 ரோபோக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1000 ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவுமாம்:

இந்த ரோபோக்களின் செயல்பாடு விரைவில் உலகம் முழுவதும் பரவும் என நெஸ்லே கம்பெனியின் ஜப்பான் பிரிவு தலைவர் கோகோக் தகயோகா தெரிவித்துள்ளார்.

மக்களும் முக்கியம்:

ஆனால், இந்த ரோபோக்களின் பயன்பாடு, மக்களின் வாழ்வாதரத்திற்கு அடிப்படையான வேலைவாய்ப்பைக் குலைக்காமல் இருந்தால் சரிதான்!

English summary
Food giant Nestle said Wednesday that its Japan unit plans to hire 1,000 robots as sales clerks at stores across the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X