For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா? உதவியாளருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது

Google Oneindia Tamil News

டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உதவியாளருக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரேலிய பிரதமர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டாரா என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றால் இஸ்ரேலில் 3865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 249 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மார்ச் 14ல் 1140, மார்ச் 29ல் 19500 பேருக்கு கொரோனா.. அதிர்ச்சியில் பிரிட்டன்.. 6 மாதம் ஊரடங்கு? மார்ச் 14ல் 1140, மார்ச் 29ல் 19500 பேருக்கு கொரோனா.. அதிர்ச்சியில் பிரிட்டன்.. 6 மாதம் ஊரடங்கு?

இந்நிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உதவியாளர் கொரோனா வைரஸ் தொற்று குறித்து சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது (பாசிட்டிவ்) உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர். ஆனால் 70 வயதாகும் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா இல்லையா என்பது உடனடியாக தெரியவில்லை.

எனினும் இஸ்ரேலிய ஊடகங்கள் பிரதமர் நெதன்யாகு நல்ல நிலையில் இருப்பதாகவே செய்திகள் வெளியிட்டன. கடந்த வாரம் பிரதமர் நெதன்யாகு மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கலந்து கொண்ட நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவரது உதவியாளர் (கொரோனா பாதித்தவர்) கலந்து கொண்டிருக்கிறார் என்றும் அந்த நாட்டு ஊடகங்களில் வெளியான செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதமருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Netanyahu aide diagnosed with coronavirus, unclear if Israeli PM affected

Recommended Video

    கொரோனாவின் கோர பிடியில் அமெரிக்கா

    இஸ்ரேலில் கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு தீர்வு காண பிரதமர் நெதன்யாகு அவசர கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா பிரச்சனையால் பொருளாதார மற்றும் சுகாதார ரீதியாக இஸ்ரேல் வேகமாக பாதிக்கப்பட்டு வருகிறது.

    English summary
    An aide to Israeli Prime Minister Benjamin Netanyahu has tested positive for coronavirus, officials said on Monday, but it was not immediately clear if Israeli PM affected
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X