For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு வலைதளம் கூட 100 சதவிகிதம் பாதுகாப்பானது அல்ல- புதிய தகவல்

Google Oneindia Tamil News

போஸ்டன்: புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கணினி எதிர் மென்பொருள் ஒன்று உலக அளவில் மிக முக்கியமான வலைத்தளங்களின் செய்திகளை திருட இணையதள திருடர்களுக்கு வழி வகுத்து வருகின்றது.

கடந்த சில வருடங்களாக கணினி பயனாளிக்களுக்கு சவாலாக அமையும் இது போன்ற வைரஸ்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.இது பெரும் அச்சத்தை ஏற்படுத்து உள்ளது.

இந்த அபாயத்தால் பயனாளிகளின் அந்தரங்க தகவல்கள் மற்றும் நிறுவனங்களின் செய்திகள் கூட எளிதாக திருடப்படும் நிலை உருவாகி வருகின்றது.

கூகுளின் ஆலோசனை:

கூகுளின் ஆலோசனை:

இந்த புதிய பிழை ஆனது மிகக் கடுமையான சேதங்களை விளைவிக்க கூடியதாக கருதப்படுகின்றது.கூகுள் மற்றும் சில பாதுகாப்பு நிறுவனங்கள் இது போன்ற பிழையுள்ள மென்பொருள்களை கண்டறிய ஆலோசனை கூறியுள்ளன.

தகவல் திருட்டு:

தகவல் திருட்டு:

இந்த அபாயகரமான மென்பொருள் மூலம் எப்படிப்பட்ட பாதுகாப்பு உடைய கணினியின் செய்திகளையும் சுலபமாக திருடிவிட முடியும்.முக்கியமாக இந்த வைரஸ் முதலில் "சர்வர்" கருவிகளைதான் பாதிக்கும்.

இணையத்திருடர்களுக்கு வசதி:

இணையத்திருடர்களுக்கு வசதி:

"ஏதேனும் ஒரு வலைதளம் இவ்வாறு பாதிப்படைந்திருந்தால் அதன்மூலம் நம்முடைய வங்கித் தகவல்கள், மற்றும் தனிப்பட்ட அனைத்து விசயங்களையும் இணையத் திருடர்கள் அறிந்து கொள்ள முடியும்" என்று கூறியுள்ளார் மைக்கேல் கோட், மென்பொருள் நிறுவன பாதுகாப்பு இயக்குனர்.

பாதுகாப்பற்ற வலைதளங்கள்:

பாதுகாப்பற்ற வலைதளங்கள்:

செரிஸ் எங்க் என்ற மென்பொருள் நிறுவன தலைவர் இது பற்று கூறியபோது, தோராயமாக உலக அளவில் 1000 இல் 100 வலைதளங்கள் மட்டுமே பாதுகாப்பு உடையதாக உள்ளன " என்று கூறியுள்ளார்.

யாகூதான் முதலிடம்:

யாகூதான் முதலிடம்:

யாகூ வலைதளம்தான் இருப்பதிலேயே வைரஸ்களால் மிக விரைவில் பாதிப்படைய கூடியதாக உள்ளது."இது போன்ற பாதிப்புற்ற வலைதளங்களை சீக்கிரமே சரி செய்வோம்"என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

English summary
A newly discovered bug in widely used Web encryption technology has made data on many of the world's major websites vulnerable to theft by hackers in what experts say is one of the most serious security flaws uncovered in recent years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X