For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடக்கக் கூடாதது நடந்துவிட்டது.. தலைநகர் பெய்ஜிங்கில் பரவிய கொரோனா.. ஜின்ஃபாடி மார்க்கெட் மூடல்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சால்மன் மீன் வெட்டும் பலகையில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதையடுத்து ஜின்ஃபாடி மார்க்கெட் மூடப்பட்டுவிட்டது.

சீனாவில் வுகான் நகரிலிருந்து கொரோனா பரவியதாக சொல்லப்படுகிறது. இங்கிருந்து உலக நாடுகள் முழுக்க கொரோனா பரவியது. சீனாவில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என அந்நாட்டு அரசு எச்சரிக்கையுடன் இருந்தது. இந்த நிலையில் 56 நாட்களுக்கு பிறகு கடந்த 11-ஆம் தேதி பெய்ஜிங்கில் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து 12-ஆம் தேதி மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியானது.

கிரிக்கெட் வீரர் அப்ரிடியை தொடர்ந்து பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் கிலானிக்கு கொரோனா வைரஸ் உறுதி கிரிக்கெட் வீரர் அப்ரிடியை தொடர்ந்து பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் கிலானிக்கு கொரோனா வைரஸ் உறுதி

சீனா தலைநகர்

சீனா தலைநகர்

இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் தலைநகர் பெய்ஜிங்கில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அது போல் சீனாவின் மற்ற பகுதிகளிலும் தொற்று பரவி அதன் மொத்த எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. இதை சீன தேசிய சுகாதார ஆணையமும் உறுதி செய்துள்ளது. இது கொரோனாவின் இரண்டாவது அலையா எனவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்த நிலையில் பெய்ஜிங்கில் உள்ள ஜின்ஃபாடி சந்தையில் இறக்குமதி செய்யப்படும் சால்மன் மீன் வெட்டும் பலகையில் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தலைநகர்வாசிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 2 மாதங்களாக கொரோனா வைரஸிடம் இருந்து பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்ட பெய்ஜிங்கில் தொற்று பரவியதால் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

பெரிய பாதிப்பு

பெரிய பாதிப்பு

கொரோனா தொற்று முழுவதுமாக முடிவுக்கு வராததால் இதுபோல் அடிக்கடி தொற்று ஏற்படுவது வாடிக்கையான ஒன்று என அந்நாட்டு சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பெய்ஜிங்கில் உள்ள மக்கள் கொரோனா குறித்து அறிந்திருப்பதால் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என அதிகாரிகள் கருதுகின்றனர்.

45 பேருக்கு அறிகுறி இல்லாமல் வைரஸ்

45 பேருக்கு அறிகுறி இல்லாமல் வைரஸ்

மீன் வெட்டும் பலகையில் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் ஜின்ஃபாடி மார்க்கெட், பெங்டாயில் உள்ள கடல்வாழ் உயிரின சந்தையும் மூடப்பட்டுவிட்டது. பெய்ஜிங்கில் மொத்தம் 6 சந்தைகள் மூடப்பட்டுவிட்டன. இங்கு 45 பேருக்கு அறிகுறி இல்லாமலேயே கொரோனா உறுதியானது. ஜின்ஃபாடி சந்தையானது 112 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது.

English summary
Beijing's largest wholesale market shut after new covid cases reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X