For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிஏ 2.75 இந்தியாவில் புதிய வகை கொரோனா.. வேறு ரூபத்தில் ஓமைக்ரான்.. எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானிகள்!

Google Oneindia Tamil News

அமெரிக்கா: கொரோனா வைரஸின் புதிய மாதிரியான பிஏ.2.75 வைரஸ் நாடு முழுவதும் பரவி வருவது குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்க நாடுகளில் முதன் முதலாக கொரோனா வைரஸின் மற்றொரு மாதிரியான ஒமைக்ரான் வைரஸ் தாக்கத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அது தொடர்பான ஆய்வுகள் தொடங்கியபோதே ஒமைக்ரான் ஐந்து வகையாக துணை மாற்றங்களை கொண்டிருப்பது தெரிந்தது. அதாவது பிஏ1, பிஏ2, பிஏ3, பிஏ4, பிஏ5 என 5 வகைகளாக ஒமைக்ரான் வைரஸ் பரவியது. மிக குறுகிய காலத்திற்குள் உலகின் அனைத்து நாடுகளையும் ஒமைக்ரான் ஆக்கிரமித்தது.

பீதியில் பிரேசில்.. 76,850 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று.. உலக அளவில் இதுவரை 6,366,189 பேர் பலிபீதியில் பிரேசில்.. 76,850 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று.. உலக அளவில் இதுவரை 6,366,189 பேர் பலி

இந்தியாவில் புதிய வகை கொரோனா

இந்தியாவில் புதிய வகை கொரோனா

குறிப்பாக பிஏ4 மற்றும் பிஏ5 வகை ஓமைக்ரான் மாதிரிகள், உலகளவில் பெரும் அச்சுறுத்தல் அளித்து வருகிறது. பிஏ5 வகை ஓமைக்ரான் இதுவரை 83 நாடுகளுக்கு, பிஏ4 வகை இதுவரை 73 நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த நிலையில் பிஏ 2.75 வகை ஓமைக்ரான் வைரஸ் மாதிரிகள், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பு

கொரோனா பரவல் அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 557,207,853 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 531,260,198 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 19,581,466 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜூன் 27 முதல் ஜூலை 3 வரையிலான வாரத்தில், 4.6 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.ஆனால் கடந்த சில வாரங்களை ஒப்பிடும்போது, இறப்பு எண்ணிக்கை 12 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.

 இந்தியாவில் பிஏ 2.75

இந்தியாவில் பிஏ 2.75

இதுகுறித்து உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், கடந்த இரண்டு வாரங்களாக 6ல் 4 பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் பிஏ5, பிஏ4 ஓமைக்ரான் மாதிரிகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதேபோல், இந்தியாவில் பிஏ2.75 வகை ஓமைக்ரான் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    இந்த கொரோனா வீரியம் அதிகம்.. முகக்கவசம் கட்டாயம் - மா சுப்பிரமணியன்
     பிஏ 2.75 தாக்கம்

    பிஏ 2.75 தாக்கம்

    இந்த புதிய வகை ஓமைக்ரான் மாதிரி குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய ஆராய்ச்சியாளர் சௌமியா சாமிநாதன் கூறுகையில், பிஏ 2.75 வகை ஓமைக்ரான் மாதிரிகள், இந்தியாவில் முதல்முதலாக கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 10 நாடுகளில் இது பரவியுள்ளது என்று கூறியுள்ளார். இந்த புதிய பிஏ 2.75 வைரஸ் வேகம் எந்தளவுக்கு உள்ளது? அது மனிதர்களை தாக்கும்போது எத்தகைய பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது? இது எவ்வளவு காலம் நீடிக்கும் ஆற்றலுடன் இருக்கும்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகாணும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

    English summary
    In Europe and America, BA.4 and BA.5 are driving waves. In countries like India a new sub-lineage of BA.2.75 has also been detected. WHO Is Following the New variant.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X