For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனாவுக்கு மருந்து ரெடி.. 48 மணி நேரத்தில் நோயாளி குணமடைந்தார்.. தாய்லாந்து சூப்பர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    அக்கரை சீமை 03-02-2020 | World news update 03-02-2020

    பாங்காங்: 71 வயது மூதாட்டியை வெறும் 48 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை இனிப்பான தகவலை கூறியுள்ளது.

    சீனாவின் வுஹான் பகுதியில் பரவிய கொரோனா வைரஸ் இதுவரை அந்த நாட்டில் சுமார் 400 பேரை பலி கொண்டுள்ளது. சீனாவிலிருந்து இந்தியா வந்த கேரள மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் அவருக்கு திருச்சூர் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும், கொரோனா முன்னெச்சரிக்கை தீவிரமாகியுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இதுவரை தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மீம் அரசியல் முதல் தொகுதி தேர்வு வரை.. திமுகவிற்கு பிகே விதிக்கும் 6 கட்டளைகள்.. ஆட்சியை பிடிக்க வழிமீம் அரசியல் முதல் தொகுதி தேர்வு வரை.. திமுகவிற்கு பிகே விதிக்கும் 6 கட்டளைகள்.. ஆட்சியை பிடிக்க வழி

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    ஒரு பக்கம் சீனா, இந்த நோயை கட்டுப்படுத்த திணறி வரும் நிலையில், அந்த நாட்டிலிருந்து தாய்லாந்து சென்ற 19 பேருக்கு, கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 71 வயதாகும் மூதாட்டி ஒருவரும், சீனாவின் வுஹான் பகுதியிலிருந்து தாய்லாந்து திரும்பியவர். அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    குணமடைந்தார்

    குணமடைந்தார்

    இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அந்த மூதாட்டி முழுமையாக குணமடைந்துவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை அமைச்சகம் வீடியோ வெளியிட்டுள்ளது. அதுவும், சிகிச்சை ஆரம்பித்த 48 மணி நேரத்தில் மூதாட்டியை கொரோனா வைரஸ் பிடியிலிருந்து காப்பாற்றிவிட்டதாகவும், அவர் தற்போது நலமாக இருப்பதாகவும், வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மூதாட்டி, சிகிச்சையளித்த டாக்டர் மற்றும் நர்சுகளிடம் உரையாடும் காட்சிகள் அதில் உள்ளது.

    8 பேர் வீடு திரும்பினர்

    8 பேர் வீடு திரும்பினர்

    தாய்லாந்தில் கொரோனா வைரஸ் பாதித்த 8 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார்கள். 11 பேருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ப்ளூ காய்ச்சலுக்கு எதிராக கொடுக்கப்படும் மருந்துகள், ஹெச்ஐவி நோயை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்துகள் போன்றவற்றை கலந்து கொடுத்து, கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்தியுள்ளதாக, தாய்லாந்து டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

    உலக நாடுகள்

    உலக நாடுகள்

    தாய்லாந்து டாக்டர்கள் கலந்து கொடுத்த மருந்து விகிதம் பலன் அளித்தால், உண்மையிலேயே அது உலக மக்களுக்கு ஒரு நற்செய்திதான். இந்த மருந்து கலவை பற்றி, பல உலக நாடுகளும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் உள்ளன. விரைவிலேயே உலக சுகாதார நிறுவனம், இந்த செய்தி பற்றிய மேலதிக தகவல்களை பெற்று, அதை அனைத்து நாடுகளுக்கும் பகிர்ந்து கொள்ளும் என நம்பப்படுகிறது.

    English summary
    A Chinese woman infected with the new coronavirus showed a dramatic improvement after she was treated with a cocktail of anti-virals used to treat flu and HIV, Thailand's health ministry said Sunday
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X