For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கீமோ தெரப்பி இல்லாமலேயே புற்றுநோயை விரட்டியடிக்க ஒரு புது வழி!

Google Oneindia Tamil News

சிகாகோ: புற்றுநோய்க்கு ஒரு புதிய முறை வைத்தியத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் கீ்மோ தெரப்பி செய்யாமலேயே புற்றுநோயை சரி செய்ய முடியுமாம்.

இந்த புதிய முறைக்குப் பெயர் இம்யூனோதெரப்பி என்பதாகும். இது உடலில் உள்ள புற்று நோய் செல்களையும், கட்டிகளையும் தாக்கி அழித்து விடுமாம். இன்னும் ஐந்து ஆண்டுகளில் கீமோ தெரப்பிக்குப் பதில் இந்த இம்யூனோதெரப்பியை அறிமுகம் செய்ய உள்ளனராம்.

இந்த புதிய வகை சிகிச்சை முறையானது, தோல் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு மிகச் சிறந்த உபாயமாக கருதப்படுகிறது. இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட நோயாளிகளுக்கு நல்ல முறையில் குணம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விமோசனம்...

விமோசனம்...

இந்த இம்யூனோதெரப்பியால் உலகம் முழுவதும் பல லட்சம் புற்றுநோயாளிகளுக்கு மிகப் பெரிய நி்ம்மதி விமோசனம் கிடைக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் கீமோதெரப்பிக்கு முற்றிலும் விடை கொடுத்து விட்டு அதிக அபாயம் இல்லாத இந்த இம்யூனோ தெரப்பியை அறிமுகப்படுத்தவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது நடக்குமாம்.

இம்யூனோதெரபி...

இம்யூனோதெரபி...

தோல், நுரையீரல் புற்று நோய் தவிர, சிறுநீரகம், பிளாடர், தலை மற்றும் கழுத்தில் வரும் புற்றுநோய்களுக்கு எதிராகவும் இந்த இம்யூனோதெரபி சிறந்த முறையில் செயல்படுவதாக ஆ்ய்வாளரக்ள் கூறுகிறார்கள்..

மாநாட்டில் தகவல்...

மாநாட்டில் தகவல்...

சிகாகோவில் நடந்த அமெரிக்க கிளினிக்கல் ஆன்காலஜி சொசைட்டியின் மாநாட்டில் இது தெரிவிக்கப்பட்டது. புற்று நோய்க்கு இங்கிலாந்தில் மட்டும் ஆண்டுக்கு 54,000 பேர் இறப்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் பெரும் அபாயகரமான நோயாக இது திகழ்ந்து வருகிறது.

சோதனை...

சோதனை...

இந்த புதிய தெரப்பியை இங்கிலாந்தில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குக் கொடுத்து சோதனை செய்துள்ளனர். அதில், சிகிச்சைப் பெற்றவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனராம்.

நம்பிக்கை...

நம்பிக்கை...

மேலும், இந்த சிகிச்சைப் பெற்றவர்கள் இயல்பான மரணத்தையே சந்திப்பார்கள் என்றும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சிலருக்கு மீண்டும் சிகிச்சை தேவையில்லை என்ற நிலையும் ஏற்பட்டுள்ளதாம்.

61 வயது பிரவுன்...61 வயது பிரவுன்...

61 வயது பிரவுன்...61 வயது பிரவுன்...

இந்த தெரப்பியால் பலன் அடைந்தவரான 61 வயதாகும் விக்கி பிரவுன் என்ற முன்னாள் கல்லூரி ஆசிரியர், 2006ம் ஆண்டு தோல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளானார். பின்னர் அவரது மார்பகங்கள் மற்றும் நுரையீரலுக்கும் புற்று நோய் பரவியது. சில மாதமே உயிர் வாழ்வேன் என்று கருதி வந்தார் அவர். ஆனால், தற்போது இம்யூனோ தெரப்பியால் இவர் சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளார்.

மீண்டும் கட்டிகள்...

மீண்டும் கட்டிகள்...

அவரது உடலில் இருந்த புற்று நோய்க் கட்டிகள் அறவே காலியாகி விட்டன. இருப்பினும் மீண்டும் அவருக்குக் கட்டிகள் வந்துள்ளன. அதையும் இம்யூனோதெரப்பி மூலம் சரிப்படுத்த டாக்டர்கள் முடிவு செஅவரது உடலில் இருந்த புற்று நோய்க் கட்டிகள் அறவே காலியாகி விட்டன. இருப்பினும் மீண்டும் அவருக்குக் கட்டிகள் வந்துள்ளன. அதையும் இம்யூனோதெரப்பி மூலம் சரிப்படுத்த டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். ய்துள்ளனர்.

தொடர் ஆய்வுகள்...

தொடர் ஆய்வுகள்...

இந்த சிகிச்சை முறை குறித்து டாக்டர் பீட்டர் ஜான்சன் கூறுகையில், இது அனைத்து புற்றுநோய்களுக்கும் மருந்து என்று சொல்ல முடியாது. சில வகை புற்றுநோய்களை சரிப்படுத்த இது உதவுகிறது. மற்ற புற்றுநோய்களுக்கும் இது நிச்சயம் அருமருந்தாக அமையும் என்றும் நம்புகிறோம். அதற்கான ஆய்வுகள் தொடர்கின்றன' என்றார்.

புற்றுநோய்...

புற்றுநோய்...

நமது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையானது, நமது உடலைப் பாதிக்கும் தொற்றுகளிலிருந்து நம்மைக் காக்க உதவுகிறது. இருப்பிலும் புற்றுநோய், கட்டிகள் போன்ற சில இந்த தற்காப்புக் கவசத்தைத் தாண்டி, உள்ளே புகுந்து விடுகின்றன. நோய் எதிர்ப்புத் தன்மையை தளர்த்தி அவற்றை பலவீனமாக்கி விடுகின்றன.

நோய் எதிர்ப்புத்தன்மை...

நோய் எதிர்ப்புத்தன்மை...

இதைச் சரி செய்யும் முயற்சியைத்தான் இம்யூனோதெரப்பி செய்கிறது. நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்புத் தன்மையை இது அதிகரிக்க உதவுகிறது. மேலும் கட்டிகளையும், புற்றையும் எதிர்த்து எப்படி போராட வேண்டும் என்றும் நமது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மைக்கு பயிற்றுவிக்கிறது.

கொஞ்சம் காஸ்ட்லி...

கொஞ்சம் காஸ்ட்லி...

இங்கிலாந்தில் சிறிய அளவில் நடைமுறைக்கு வந்துள்ள இந்த சிகிச்சை முறையானது சற்று காஸ்ட்லியாகவே உள்ளது. இருந்தபோதும் விரைவில் இதுவும் சரி செய்யப்பட்டு அனைவருக்கும் உகந்த சிகிச்சையாக மாறலாம் என்று நம்புவோம்.

English summary
A cancer treatment that teaches the body to attack tumours will save the lives of tens of thousands of patients, researchers claim. Experts believe it could be the biggest step forward since chemotherapy and could replace it within five years. The treatment is particularly effective against some of the deadliest types of the disease including lung and skin cancer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X