For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒருவர் மரணம்.. மூவர் காயம்.. சுந்தர் பிச்சையை கலங்க வைத்த துப்பாக்கி சூடு.. வெளியாகும் புதிய உண்மை

யூ டியூப் தலைமையகத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கூகுள் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை வருத்தம் தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சுந்தர் பிச்சையை கலங்க வைத்த துப்பாக்கி சூடு..

    கலிபோர்னியா: நசீம் அஃதாம் என்ற பெண் யூ டியூப் தலைமையகத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கூகுள் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை வருத்தம் தெரிவித்துள்ளார்.

    யூ டியூப் வீடியோக்கள் மூலம் வரும் வருமானம் குறைந்ததால் அமெரிக்காவை சேர்ந்த நசீம் அஃதாம் என்ற பெண் யூ டியூப் தலைமையகத்தில் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார். பின் அந்த பெண் தன்னையே துப்பாக்கியால் சுட்டு மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

    நேற்று மாலை கலிபோர்னியாவில் இருக்கும் யூ டியூப் நிறுவன தலைமையகத்தில் துப்பாக்கியுடன் புகுந்த இவர் சரமாரியாக சுட்டு உள்ளார். இதில் மூன்று பேர் காயமடைந்து இருக்கிறார்கள்.

    காதலர் இருந்தார்

    காதலர் இருந்தார்

    நசீம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இன்னொரு முக்கியமான தகவலும் வெளியாகி இருக்கிறது. இதில் மூன்று பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள். அதில் ஒருவர் மிகவும் மோசமான உடல்நிலையுடன் இருக்கிறார். அவர் நசீமின் முன்னாள் காதலர் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இந்த துப்பாக்கி சூடு இதன் காரணமாக நடந்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

    புதிய சந்தேகம்

    புதிய சந்தேகம்

    அதே சமயம் இந்த துப்பாக்கி சூடு வெறும் யூ டியூப் வீடியோக்களின் வருமான பிரச்சனையால் மட்டும் நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு பின் வேறு ஒரு காரணம் இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகப்படுகிறது. நஸீம் இதற்கு முன் யூ டியூப் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார் என்று தகவல்கள் கசிந்து இருக்கிறது.

    சுந்தர் பிச்சை கலக்கம்

    இந்த துப்பாக்கி சூடு குறித்து கூகுள் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்துள்ளார். அதில் ''இன்று நடந்து இருக்கும் மோசமான சம்பவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. யூ டியூப் சிஇஓ சூசனும் நானும் இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும், யூ டியூப் நிறுவனத்திற்கும் இந்த மோசமான நேரத்தில் உறுதுணையாக இருப்போம். உதவியாக இருந்த போலீஸ் உட்பட அனைவருக்கும் நன்றி'' என்றுள்ளார்.

    உடனடி தடை

    உடனடி தடை

    இந்த சம்பவம் காரணமாக அமெரிக்காவில் தற்போது துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிரான குரல் வலுத்து இருக்கிறது. டிவிட்டர் நிறுவனர் தொடங்கி எல்லோரும் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுமென்றே இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இவர்கள் வெளிப்படையாக குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள்.

    English summary
    A woman named Nasim Aghdam fired in YouTube head office for low views in videos. She has been arrested for the violence. Three people injured in this incident. Sundar Pichai says that ''There are no words to describe the tragedy that occurred today. @SusanWojcicki & I are focused on supporting our employees & the @YouTube community through this difficult time together. Thank you to the police & first responders for their efforts, and to all for msgs of support.'' in twitter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X