For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஷுகர்" இருந்தா தினசரி சிவப்பு ஒயின் குடிங்க... சரியாப் போய்ரும் - ஹார்ட் அட்டாக்கும் வராதாம்

Google Oneindia Tamil News

ஜெருசலேம்: நீரிழிவு நோயாளிகளை இதய நோயிலிருந்து காப்பாற்ற சிவப்பு ஒயின் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதிகளாவிய ரத்த குளுகோஸ் உடலில் சேர்வது இன்சுலீன் குறைபாட்டையோ அல்லது இன்சுலீனை உடல் உபயோகிக்கும் தன்மையை நிறுத்துவதோ டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும்.

குழந்தைகள், இளம் வயதினர் தொடங்கி முதியோர் வரை அனைவரையும் தாக்கும் இந்த நோய்க்கு தினசரி இரவில் அளவான சிவப்பு ஒயின் குடிப்பது உடலுக்கு நன்மை தரும் என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதய நோய் வாய்ப்பு:

இதய நோய் வாய்ப்பு:

பொதுவாக இந்த வகை நீரிழிவு நோயால் இதயத்தைப் பாதுகாக்கும் அடர்த்தியான எச்.டி.எல் கொழுப்பு உடலில் இல்லாது போவதால் இதய நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

2 ஆண்டுகளுக்கு ஆய்வு:

2 ஆண்டுகளுக்கு ஆய்வு:

இஸ்ரேலின் நெகேவ் நகரிலுள்ள பென் குரியான் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 224 பேரை சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஆய்வுக்கு உட்படுத்தியது.

சிவப்பு ஒயின் பருகுங்கள்:

சிவப்பு ஒயின் பருகுங்கள்:

இவர்களை விருப்பமான மத்திய தரைக்கடல் பகுதி சார்ந்த உணவுடன் இரு பாகமாக பகுத்து ஒவ்வொரு இரவும் ஐந்து அவுன்ஸ் தண்ணீரோ அல்லது சிவப்பு ஒயினோ பருகுமாறு பரிந்துரைக்கப்பட்டது.

கொழுப்பும் அதிகம்:

கொழுப்பும் அதிகம்:

இரு ஆண்டுகள் கழித்து பார்த்ததில் இதில் தண்ணீரைப் பருகியவர்களைக் காட்டிலும் சிவப்பு ஒயினைப் பருகியவர்கள் சிறப்பான தூக்கம், சீரான ஜீரண சக்தி மட்டுமல்லாது இதயத்தைப் பாதுகாக்கும் அடர்த்தியான எச்.டி.எல் கொழுப்பும் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மறதி நோயையும் தடுக்கும்:

மறதி நோயையும் தடுக்கும்:

ஆகவே, ஐந்து அவுன்ஸ் ஒயின் உடல் நலத்தைப் பாதுகாத்து மருத்துவர்களை அணுக வேண்டிய தேவையைக் குறைக்கும் என இந்த ஆராய்ச்சிக்குழு தெரிவித்துள்ளது.

"டிமென்சியா":

சிவப்பு ஒயின், ஞாபக சக்தியை மேம்படுத்தி முதியோருக்கு ஏற்படும் "டிமென்சியா" என்கிற மறதி நோயையும் தடுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

English summary
A glass of red wine every night may help people with type 2 diabetes manage their cholesterol and cardiac health, scientists say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X