For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்னொரு வைரஸ் வந்தாச்சு.. 3வது புதிய கொரானா பரவ தொடங்கியது.. நைஜீரியாவில்..!

நைஜீரியாவில் ஒரு வித வைரஸ் பரவி வருகிறது

Google Oneindia Tamil News

கென்யா: 3வது புதிய கொரோனா வைரஸ் நைஜீரியாவில் பரவத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து நைஜீரியாவிலும் புதிய கொரோனா பரவத் தொடங்கியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதுள்ள கொரோனாவுக்கே இன்னும் விடை கிடைக்கவில்லை.. அதற்கு மருந்தும் கண்டுபிடிக்கவில்லை.. தடுப்பூசியும் விரைவில் வர போவதாக நம்பிக்கை தந்து வருகிறார்கள்.

New separate coronavirus Strain emerges in Nigeria

இந்நிலையில், பிரிட்டனில் ஒரு வைரஸ் பரவி உள்ளது.. கொரோனா வைரஸ், புதிதாக உருமாறி மிக வேகமாக பரவி வருவதாக சொல்கிறார்கள்.. இதனால் இங்கிலாந்து இடையேயான விமானப் போக்குவரத்துக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளன.இந்நிலையில், நைஜீரியாவிலும் புதிய கொரோனா உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

இதை பற்றி, ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைவர் ஜான் கெங்கசாங் சொல்லும்போது, "இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவில் பரவும் கொரோனாவை போல இல்லாமல் இது தனி வைரஸாக உருவாகியுள்ளது... ஆனால், இது என்ன வைரஸ் என்று உறுதியாக தெரியவில்லை.. இந்த புதிய வைரஸ் குறித்து ஆய்வுகளை நடத்தி வருகிறோம்.

பிரிட்டனிலிருந்து திரும்பிய பெண்ணுக்கு கொரோனா... அதிகாரிகளிடம் இருந்து தப்பி ரயிலில் ஆந்திர பயணம்பிரிட்டனிலிருந்து திரும்பிய பெண்ணுக்கு கொரோனா... அதிகாரிகளிடம் இருந்து தப்பி ரயிலில் ஆந்திர பயணம்

எங்களுக்கு கொஞ்சம் டைம் தேவைப்படுகிறது... இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது... ஆனால், நைஜீரியாவில் கொரோனா பாதிப்பு அதிவேகத்தில் அதிகரிப்பதாக தெரியவில்லை... தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்" என்றார். விரைவில், நைஜீரியா இடையேயும் விமான போக்குவரத்துக்கு விரைவில் தடை அமல்படுத்தப்படும் என தெரிகிறது.

இந்த வைரஸ் இளம் வயதினரை அதிகம் பாதிக்குமாம்.. நைஜீரியா அதிக இளைஞர்களை கொண்ட நாடு என்பதால் மிகப்பெரிய அதிர்வலைகள் உருவாகி உள்ளன.. கடந்த ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் கொரோனா நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தபோது, வைரஸ் மரபியல் மாற்றம் அடைந்திருப்பது தெரியவந்துள்ளது. இப்படி ஒவ்வொரு நாட்டிலும் புது புது வைரஸ் பரவி வருவது கலக்கத்தை மக்களுக்கு உண்டு பண்ணி வருகிறது.

English summary
New separate coronavirus Strain emerges in Nigeria
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X