For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டேட்டஸ்கள் இனி ஒரே நாளில் காணாமல் போய்விடும்... பேஸ்புக்கில் அதிரி, புதிரி மாற்றம்!

இனி நாம் பேஸ்புக்கில் போடும் சில ஸ்டேடஸ்கள் மட்டும் 24 மணி நேரத்தில் அதுவாகவே டெலிட் ஆகும் வகையில் அந்த ஆப் அப்டேட் செய்யப்பட இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்:இனி நாம் பேஸ்புக்கில் போடும் சில ஸ்டேடஸ்கள் மட்டும் 24 மணி நேரத்தில் அதுவாகவே டெலிட் ஆகும் வகையில் அந்த ஆப் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. இதற்கான புதிய அப்டேட் விரைவில் வெளியிடப்பட இருக்கின்றது.

இது போன்ற ஸ்டேடஸ்கள் போடப்படும் காலத்தில் இருந்து சரியாக 24 மணி நேரத்திற்கு மட்டுமே பேஸ்புக் நிலைத் தகவலில் இடம் பெரும் என்று கூறப்படுகிறது.

மக்களை அதிக அளவில் பேஸ்புக் ஸ்டேடஸ்கள் போடா வைக்கும் நோக்கத்தில் இந்த அப்டேட் உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

 வாட்சப்பில் வரும் ஒருநாள் ஸ்டேடஸ்கள்

வாட்சப்பில் வரும் ஒருநாள் ஸ்டேடஸ்கள்

24 மணி நேரம் மட்டுமே இருக்க கூடிய வகையில் ஸ்டேடஸ்கள் போடும் வசதி முதலில் வாட்சப்பில் தான் கொண்டு வரப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு வாட்சப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி அனைவராலும் பாராட்டப்பட்டது. இது வந்த சில தினங்களிலேயே பலரும் நிறைய வாட்சப் ஸ்டேடஸ்கள் போட ஆரம்பித்தனர். அனைவரும் ரயில் போல நீளமாக தங்களது வாட்சப் ஸ்டேடஸ்களை அலங்கரிக்க தொடங்கினர். இதில் 30 செகண்ட் வீடியோக்கள் கூட போடா முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

 பேஸ்புக்கில் தற்காலிக புரோபைல் பிக்சர்

பேஸ்புக்கில் தற்காலிக புரோபைல் பிக்சர்

இந்த நிலையில் வாட்சப்பில் ஸ்டேடஸ்கள் வைப்பது போலவே பேஸ்புக்கிலும் தற்காலிகமாக புரோபைல் பிக்சர் மாற்றும் வசதி உருவாக்கப்பட்டது. அதன்படி பேஸ்புக்கில் உலக நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து நிறைய பேர் தற்காலிக புரோபைல் பிக்சர் வைக்க ஆரம்பித்தனர். இது தற்போது பெரிய அளவில் மாறியுள்ளது. அரசியல் கொள்கைகள்,படங்களின் புரொமோஷன்களுக்கு கூட இந்த தற்காலிக புரோபைல் பிக்சர் மாற்றும் வேலைகள் செய்யப்படுகின்றன.

 வருகிறது பேஸ்புக்கில் புதிய அப்டேட்

வருகிறது பேஸ்புக்கில் புதிய அப்டேட்

இப்போது வாட்சப்பில் இருப்பது போலவே பேஸ்புக்கிலும் 24 மணி நேர ஸ்டேடஸ்கள் வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட இருக்கின்றது. இதன்படி நாம் போடும் ஸ்டேடஸ்கள் பேஸ்புக்கில் 24 மணி நேரம் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாகவே வாட்சப்பில் இந்த வசதி சோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அப்டேட் இந்த மாதத்திற்குள் விரைவில் வெளியாகும்.

 எதற்காக இந்த மாற்றம்

எதற்காக இந்த மாற்றம்

இந்த அப்டேட்டின் படி நாம் போடும் அனைத்து ஸ்டேடஸ்களும் 24 மணி நேரத்தில் மறைந்து போகாது. இதன்படி நாம் தேர்ந்தெடுக்கும் ஸ்டேடஸ்கள் மட்டுமே 24 மணி நேரத்தில் காணாமல் போகும் என கூறப்படுகிறது. அப்படி நாம் தேர்ந்தெடுத்து போடும் ஸ்டேடஸ்களை கூட நாம் 24 மணி நேரத்திற்குள் நிரந்தர ஸ்டேடஸாக மாற்றிக் கொள்ளலாம். மக்களை அதிக அளவில் பேஸ்புக் உபயோகப்படுத்தி , அதிக ஸ்டேடஸ்கள் போடா வைப்பதற்காக இந்த அப்டேட் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

English summary
New update in Facebook will allow the self-destructing of statuses. This new 24 hr status facility will come soon in next update as a way to encourage users to post lots of status updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X