For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிவிட்டர் டிரெண்டிற்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய நியூசிலாந்து பிரதமர்.. கடைசியில் மாட்டிகிட்டாரே

நியூசிலாந்து பிரதமர் டிவிட்டர் டிரெண்டிற்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி, ஒரு பெண்ணுக்கு பரிசுகள் வழங்கி இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

வெலிங்டன்: நியூசிலாந்து பிரதமர் 'ஜெசின்ரா ஆர்டெர்ன்' டிவிட்டர் டிரெண்டிற்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தன் நாட்டில் இருக்கும் 'ரெபேக்கா டெரி' என்ற பெண்ணுக்கு பரிசுகள் வழங்கி இருக்கிறார்.

தற்போது இந்த விஷயம் வெளியே தெரிய வந்து இருக்கிறது. இதனால் பிரதமர் கொடுத்த அந்த கிறிஸ்துமஸ் பரிசுகள் அனைத்தும் வைரல் ஆகி இருக்கிறது.

நியூசிலாந்தின் டிவிட்டரில் தற்போது 'சீக்ரெட் சான்டா' என்ற டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. இதன் மூலம் மக்கள் பிறருக்கு தெரியாமல் ரகசியமாக பரிசு பொருட்கள் அனுப்பி வருகின்றனர்.

நியூசிலாந்து கொண்டாட்டம்

நியூசிலாந்து தற்போது எல்லோரும் பிறருக்கு தெரியாமல் கிறுத்துமஸ் தாத்தாவாக மாறி பிறருக்கு பரிசு பொருட்கள் வழங்கி வருகின்றனர். இதுகுறித்து டிவிட் செய்த நியூசிலாந்து பிரதமர் 'ஜெசின்ரா ஆர்டெர்ன்' ''நான் டிவிட்டரில் அதிகம் எழுத மாட்டேன். ஆனால் எனக்கு கிறிஸ்துமஸ் பிடிக்கும். நானும் சீக்ரெட் கிறிஸ்துமஸ் தாத்தாவாக இருக்க விரும்புகிறேன். எனவே நானும் இந்த டிரெண்டில் சேர்கிறேன். நீங்களும் நாளைக்குள் சேருங்கள்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

ரெபேக்கா டெரி

நவம்பர் இறுதியில் பிரதமர் அனுப்பிய பரிசுகள், தற்போது ரெபேக்கா டெரி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்து இருக்கிறது. அதை டிவிட்டரில் பகிர்ந்த ரெபேக்கா டெரி ''வந்துவிட்டது. சீக்ரெட் சான்டாவிற்கு மிக்க நன்றி. எனக்கு இது பிடித்து இருக்கிறது. இந்த புத்தகத்தை என மகளுக்காக பல நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்தேன்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கண்டுபிடித்துவிட்டார்

அந்த பரிசு பொருட்களுடன் ஒரு கடிதமும், சின்ன இலச்சினை ஒன்றும் இருந்து இருக்கிறது. அந்த இலச்சினையில் ஆங்கிலத்தில் 'எபிஇசி 2017' என்று எழுதி இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் வியட்நாமில் நடந்த ஆசியா பசிபிக் மாநாட்டில் நியூசிலாந்து பிரதமர்தான் இந்த இலச்சினையை பெற்றார். உலகத்தில் இருக்கும் சில முக்கிய தலைவர்களிடம் மட்டுமே இது இருக்கிறது. இந்த இலச்சினை பரிசு பொருளுடன் இருந்ததை வைத்து அந்த ரகசிய சான்டா பிரதமர்தான் என்பதை கண்டுபிடித்து இருக்கிறார்.

மிக்க நன்றி

இதனால் நியூசிலாந்து பிரதமரை டிவிட்டரில் டேக் செய்த அந்த பெண் ''மிக்க நன்றி ஜெசின்ரா ஆர்டெர்ன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த இலச்சினையை பொக்கிஷமாக வைத்து இருப்பேன். உங்களுக்கு கிறுத்துமஸ் வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
A new trend in New Zealand named @nzsecretsanta became viral in twitter. People will act as the santa for unknown person in this chirstmas. New Zealand Prime Minister became secret santa for a woman in New Zealand. Finally the woman found that her secret santa was Prime MInster, and tweeted about her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X