For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: திருமணம் முடிந்த அடுத்த சில நிமிடங்களிலேயே புதுமணத்தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸால் பகுதியைச் சேர்ந்தவர் ஹார்லி மோர்கன் (19). இவர் தனது தோழி பவுட்ரியாக்ஸை (20) காதலித்து வந்தார். இதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அதற்கான பதிவில் கையெழுத்திட்டு வெளியே வந்தனர்.

கண் எதிரே

கண் எதிரே

கார் பார்க்கிங்கில் இருந்து தங்கள் காரில் ஏறினர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி அவர்களது குடும்பத்தினர் கண்ணெதிரே உயிரிழந்தனர்.

வாழ்த்த

வாழ்த்த

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோர்கனின் அம்மா லஷாவ்னா கூறியதாவது: திருமணத்துக்கு வாழ்த்த வந்தேன். ஆனால் இவர்கள் இறப்பதை பார்க்க வேண்டியதாகிவிட்டது. அவர்களுக்கு நிறைய கனவு இருந்தது.

பரபரப்பு

பரபரப்பு

எல்லாம் போய்விட்டது என கூறி கண்ணீர் விட்டார். புதுமண ஜோடி திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேகமாக வந்த லாரி

வேகமாக வந்த லாரி

இதுகுறித்து விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், புதுமணத் தம்பதி தங்களது காரை 5 வழி நெடுஞ்சாலையில் இயக்கத் தொடங்கினர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி, இவர்களது கார் மீது மோதியது.

சோகம்

சோகம்

இதில் இவர்களது கார் பலமுறை உருண்டு சென்றது. பின்னர் அங்கிருந்த கால்வாய்க்கு அருகே நின்றது. இவர்களது உறவினர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தும் இடத்துக்கு சென்றுவிட்டனர் என்றனர். திருமணமாகி 5 நிமிடங்கள் மட்டுமே உயிருடன் தம்பதி இருந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A newlywed couple was killed in a horrific car crash after leaving the courthouse following their wedding ceremony.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X